Youtube Link
https://www.youtube.com/watch?v=n0JvSvGK-pk
வேதபகுதி : ஏசாயா 40 :3,4,5
தலைப்பு : உறவுகளோடு நல்லுறவு வேண்டும்.( உறவுகளுக்குள்ளே நாம் ஆயத்தமாக வேண்டும்.)
பிறரோடு உள்ள உறவுகளை நாம் சீர்படுத்துவது அவசியமாக உள்ளது.
மற்றவர்களோடு சிக்கல்கள் இருந்தால் நம்மால் மேல்நோக்கி செல்ல முடியாது.
மத்தேயு 5: 22 - 24
1. தன் சகோதரன் மீது நியாயமில்லாமல் கோபித்து கொள்வது.
2. தன் சகோதரனை வீணனென்று சொல்பவன்.
3. முட்டாள் என்று சொல்பவன்.
சகோதரனிடத்த்ில் குறை உண்டென்று நினைவுகூர்ந்தால் முதலில் ஒப்புரவாகி பின் காணிக்கையை செலுத்த வேண்;டு;ம். காணிக்கை முக்கியம் அல்ல வாழ்க்கைமுறை தான் முக்கியம். (சகோதரனோடு ஒப்புரவாக வேண்டும்.) உ.தா: ஏசா, யாக்கோபு (ஆதி : 27,28)
ஆதி 32: 3,4,5 யாக்கோபு அடுத்த நிலையை நோக்கி போவதற்கு இருபது ஆண்டுகள் சீர்படுத்தாத சகோதரனுடைய உறவுவை சீர்படுத்த விரும்பினான். இதற்காக முதலில் தேவனிடத்தில் ஜெபம் செய்தான்.
Ø (ஆதி 32:11) உறவை சீர்படுத்த நினைக்கும் போது ஏசாவை நினைத்து அவனுக்குள் பயம் வருகிறது. இதை தேவ சமூகத்தில் சொல்லி ஜெபிக்கிறான்.
ஆதி 32:26, தேவனிடம் போராடி நீர் என்னை ஆசீர்வதிக்கவேண்டும் என்று ஜெபித்தான் . ஆதி 33:4 ல், ஏசாவோ அவனைத் தழுவி, கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம் செய்தான். ஒப்புரவாக்கப்படும் சூழல் நடந்தால் தான் வாழ்க்கையின் அடுத்த சூழ்நிலைக்கு செல்ல முடியும்.
ஆதி 33:4,16,17, ஒப்புரவாக வேண்டும் ஆனால் மறுபடியும் சேர்ந்து இருக்க வேண்டும் என்று அவசியமில்லை தூரமாய் இருந்தாலும் ஒப்புரவோடு இருப்பது தான் அவசியம்.
யாக்கோபு –ஏசா , ஒப்புரவாகிவிட்டு பின் அவரவர் இடத்திற்கு திரும்பி சென்று விட்டனர். எந்த இடத்தில் விட்டுகொடுக்க வேண்டுமோ அவைகளை விட்டுக்கொடுத்து உறவுகளை பலப்படுத்தி கொள்ள வேண்டும்.
Ø (மத் 18:15 - 17) எப்படி அவர்களை அணுகுவது :
(நமக்கு விரோதமாய் ஒருவர் குற்றம் செய்வது.)
ஒருவர் நமக்கு விரோதமாய் குற்றம் செய்தால்.
1. முதலில் அவர்களை தனியே அழைத்து அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்த வேண்டும்.
2. தனியே கூறி கேட்கவில்லை என்றால் இரு நபரை அழைத்து பேசலாம்.
3. அதுவும் கேட்கவில்லையென்றால் குடும்பத்தோடு பேசலாம்.
4. அதையும் கேட்கவில்லையென்றால் அஞ்ஞானி என்று விட்டுவிட வேண்டும்.
Ø எபேசியர் 4: 29 - 32, மன்னிப்பு கொடுங்கள்:
தேவன் நம்மை மன்னித்து இருக்கிறார், ஆகையால் நாமும் பிறரை மன்னிக்க வேண்டும். கொலோ 3:13 ன் படி, கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.
கணவன், மனைவி இடையே மன்னிக்கும் தன்மை கண்டிப்பாய் இருக்க வேண்டும். நாம் மன்னிக்கும்போது குடும்ப உறவு கட்டியெழுப்பப்படும். வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு போக வேண்டுமானால், தேவனுடைய மன்னிக்கும் குணாதிசயத்தை வளர்த்து கொள்வதற்கு தேவ சமூகத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்க வேண்டும். ஆமென்.