×

Youtube Link

https://www.youtube.com/watch?v=IEbb1jusdZk


வேதபகுதி: சங்கீதம்13 (1-6)

சங்கீதம்13:1,2 – புலம்பல்

சங்கீதம்13:3,4 – ஜெபம்

சங்கீதம்13:5,6 – துதி. இந்த 6 வசனங்கள் அடங்கிய சிறிய சங்கீதம் 13-ம் சங்கீதம்.

விரக்தியில் ஆரம்பித்த தாவீது இந்த சங்கீதத்தை மகிழ்ச்சியில் முடிக்கிறான்.

தேவதிட்டம் நிறைவேறாதபடி தாவீதின் வாழ்வில் அநேகர் தடை செய்தார்கள். (சவுல், தாவீதின் அண்ணன்கள்) ஆனாலும் தேவன் தம்முடைய திட்டத்தை தாவீதின் வாழ்வில் சரியாய் நிறைவேற்றினார்.

  பிரச்சனைகள், ஏராளமான குழப்பத்தின் சூழ்நிலையின் நடுவே பாடப்பட்ட சங்கீதம் இந்த 13-ம் சங்கீதம்.

 தாவீது இந்த சங்கீதத்தில் முதல் 2 வசனங்களில் 4 கேள்விகளை கேட்கிறான்.

1.            எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர்?

2.            எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?

3.            எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்?

4.            எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்?

இந்த 4 கேள்விகளும் எதை முக்கியமாக உணர்த்துகிறது என்றால். தாவீதின் மன வலி. (விரக்தியின் அழுத்தம்)

17 வயதில் தாவீதை அபிஷேகம் செய்தாலும் அவனை உருவாக்குவதற்கு தேவன் சிலகாலம் எடுத்தார். தேவனுடைய கரம் நம்மோடிருப்பதை நம்மால் உணரமுடியாவிட்டாலும்  அவர் நமக்கு நன்மையே செய்வார் என்று அவருடைய இருதயத்தை நாம் நம்ப வேண்டும்.

உதா: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ தேவகரத்தை உணரமுடியாவிட்டாலும் தேவ இருதயத்தை நம்பினார்கள். தேவன் கூட இருப்பதை அனுபவித்தார்கள்.

  தாவீது தேவ சமூகத்தில் புலம்பினாலும் அந்த புலம்பலை ஜெபமாக மாற்றுகிறான். தாவீதின் ஜெபம், நீர் என்னை நோக்கிப் பார்த்து, எனக்கு செவிக்கொடுத்தருளும், நான் மரண நித்திரைஅடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும் என்று தேவ சமூகத்தில் ஜெபித்தான். (இந்த மாதம் முழுவதும் இந்த வார்த்தைகளே உங்கள் ஜெபமாக இருக்கட்டும்.)

யாத்திராகமம் 14:21(கர்த்தர் இராமுழுவதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப் பண்ணினார்: ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. ஆதியாகமம்8:1(தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார். அப்பொழுது ஜலம் அமர்ந்தது.)

நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் அனுமதிக்கும் காற்று நம்முடைய பிரச்சனைகளை ஓயப்பண்ணுவதற்கு தேவன் நம்மை நோக்கி பார்க்கிறார் என்ற புரிதல் நமக்கு வேண்டும்.

 நீர் என்னோடு பேசும் என்று தாவீது கேட்கிறார். நாமும் அவருடைய சத்தத்தை கேட்கிறவர்களாய் இருக்க வேண்டும்.

கண்களை தெளிவாக்கும் என்று ஜெபித்தான். நம்முடைய கண் தெளிவாக வேண்டும். நமக்கு பெலன் வேண்டும். தேவ பிரசன்னம், தேவ வார்த்தை தரும் பெலனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கை வர வேண்டும். இந்த ஜெபத்தை ஏறெடுத்தவுடன் தாவீது பாடலையும் பாடுகிறார்.

  சங்கீதம் 13:5,6. கிருபை என்பது தகுதியில்லாதவனுக்கு தேவன் தரும் நன்மை. தேவனுடைய மாறாத அன்பின் மீது நம்பிக்கையாய் இருக்கிறேன் என்கிறார். உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும் என்கிறார்.

பவுல், சீலாசிறைச்சாலையில் இருக்கும் பொழுதே தேவனைப் பாடித் துதித்தார்கள்.

    எந்த சூழ்நிலையிலும் தேவனை பாடி துதிக்க வேண்டும். கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன். பிரச்சனைகளை விட நமக்கு நன்மை செய்கிற தேவன் நம்மோடு இருக்கிறார் அதை நாம் உணர வேண்டும். எனவே,

             தேவனிடத்தில் நம் உணர்வுகளை அப்படியே சொல்லிவிட வேண்டும்.

             அவரிடம் ஜெபம் செய்ய வேண்டும்.                           

             அவரை நம்பி அவரைத் துதிக்க வேண்டும்.

ஆமென்.






Blog Categories

Related Posts

×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God