Youtube Link
https://www.youtube.com/watch?v=WiHW94tTe0s
வேதபகுதி: ஆதியாகமம் 50:15-21
• தேவன் யோசேப்புக்கு கொடுத்த வாக்குத்தத்தங்களை நிறைவேற்றினார்.
• தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை.
தேவன் யோசேப்பின் வாழ்வில் செய்த காரியங்கள்:
1. மனிதனுடைய தோல்வியைக் காட்டிலும் தேவனுடைய வல்லமை மேலானது.
யோசேப்பு படிப்படியாக தன் வாழ்க்கை உயரும் என்று எண்ணினான் ஆனால் படிப்படியாய் அவன் வாழ்க்கைதரம் கீழே இறங்கியது. 14 ஆண்டுகள் இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கு, தேவன் யோசேப்பின் வாழ்வில் இல்லாமல் போய்விட்டாரோ என்று யோசேப்பை சார்ந்தவர்களும், யோசேப்பும் நினைக்கும் அளவுக்கு இருந்தது.
குழியின் அனுபவம், அடிமையின் அனுபவம், சிறைச்சாலையின் அனுபவம், குற்றம்சாட்டப்பட்ட அனுபவம் (போத்திபார் மனைவி). அடுத்தடுத்து யோசேப்பு தோல்விகளை சந்தித்தான். தன் சகோதரர்கள் மேல் கசப்புணர்வு அவனுக்கு ஏற்பட்டு இருக்கலாம்.
யோசேப்பை குழியில் போட்டு 33 ஆண்டுகள் கழித்தும் அவன் சகோதரர்கள் அந்த குற்ற உணர்வோடும், பய உணர்வோடும் வாழ்ந்தார்கள். ஆனால் யோசேப்பு அவர்களை நோக்கி பயப்படாதிருங்கள் என்கிறான். ஆதியாகமம் 50:19.
தேவனுடைய கிருபை தேவனுடைய வல்லமை அவன் இருதயத்தை நிரப்பியதால் அவன் மன்னிக்க தயை பெருத்தவனாயிருந்தான்.
தேவனுடைய வல்லமை நம்முடைய இருதயத்தின் காயங்களை ஆற்றுகிறது. நாம் தேவ சமூகத்தில் அறிக்கை செய்து மன்னிப்பை கேட்டு நம் மனதை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் காயப்படுத்தபடுகிறோம், எதிர்பாராத கடினமான பாரங்கள் தோல்விக்குள் கொண்டு போகிற மாதிரி இருக்கலாம் நாம் தேவனை சார்ந்து கொள்ளும் போது வலிகளுக்கு மேலாக தேவவல்லமை நம்மோடு இருப்பதை உணரமுடியும். மற்றவர்களை மன்னிப்பதற்கு தேவவல்லமை(வெளிப்பட) நமக்குள் கிரியை செய்யப்பட வேண்டும்.
2. மனிதனுடைய எண்ணங்களைப் பார்க்கிலும் தேவனுடைய நோக்கம் பெரியது.(ஆதியாகமம் 50:20,21)
யோசேப்பின் சகோதரர்களின் நோக்கம், அவனுக்கு தீமை செய்ய நினைத்தது. தேவனுடைய நோக்கம், அவனுக்கு நன்மை செய்வது.
2விதமான எண்ணங்கள். மனிதனுடைய எண்ணம்-தீமை செய்ய நினைப்பது(மாற்கு 7:21,22).
தேவனுடைய எண்ணம் எப்பொழுதுமே நன்மை செய்வது. மற்றவர்களுக்கு சிலஉயர்வுகள் வரும்போது, சகமனிதர்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியாது.
4விதமான சுபாவங்கள்:
நன்மைக்கு நன்மை செய்வது மனித சுபாவம்.
தீமைக்கு தீமை செய்வது மிருக சுபாவம்.
தீமைக்கு நன்மை செய்வது தேவ சுபாவம்.
நன்மைக்கு தீமை செய்தல் பேய் சுபாவம்.
தேவன் எதிர்பார்ப்பது தேவ சுபாவம் நம்மிடம் இருப்பதையே. யோசேப்பின் வாழ்க்கை படிப்படியாய் கீழ்நோக்கி போனாலும் கர்த்தர் யோசேப்போடே இருந்தார் என்ற புரிதல் அவனுக்குள் இருந்தது. தேவனுடைய பார்வையில் ஆச்சரியமும், அதிர்ச்சியும் கிடையாது.
யோசேப்பின் வாழ்வையும் அவன் நிலைகளையும் அவர் ஆச்சரியமாய் பார்க்கவில்லை. தேவன் தம்முடைய நோக்கத்திற்கு ஏற்றாற்போல் வனைந்து கொள்கிறார்.
நம்முடைய வாழ்வில் எது நடந்தாலும் தேவன் நன்மையாய் முடிய பண்ணுவார். மனிதன் நமக்கு தீமை செய்யும் போது நாம் அந்த தீமையை பார்க்காமல் கர்த்தருடைய கரத்தைப் பார்க்க வேண்டும்.
தேவதிட்டத்தை நம்ப வேண்டும் அது புரியாவிட்டாலும் நம்ப வேண்டும்.
ஆதியாகமம்50:20, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு அதை நன்மையாக முடியப்பண்ணினார் என்று கூறினான்.
இந்த வார்த்தையை சொல்லும் அளவிற்கு அவனால் முடிந்தது என்றால் அது நிச்சயம் தேவனுடைய சித்தத்தை புரிந்து கொண்டதினால் தான்.
3. மனிதனுடைய இயலாமையைக் காட்டிலும் தேவனுடைய வாக்குத்தத்தம் பெரியது.
சாராள்- கர்ப்பம் சாத்தியமில்லை, எரிகோ- விழுவதற்கும் சாத்தியமில்லை. இயேசு மரித்தார், முடிந்தது என்று அனைவரும் நினைத்தார்கள் ஆனால் தேவன் உயிர்த்தெழுதலின் வல்லமையோடு வெளிப்பட்டார். மனிதன் முடிந்தது என்று நினைக்கும் காரியத்தில் தேவன் செயல்பட ஆரம்பிப்பார். யோசேப்பின் சகோதரர்கள் அவனுடைய வாழ்க்கை முடிந்தது என்று நினைத்தார்கள், ஆனால் தேவன் வாழ்வில் செயல்பட்டார். இது தேவனுடைய கரத்தினால் தான் முடியும். அவருடைய கரம் வல்லமையுள்ளது. அவரால் எல்லாம் கூடும்.
தேவனால் ஆகாத காரியம் ஒன்று உண்டோ என சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
காயங்கள் ஆறுவதற்கு தேவனுடைய கரத்தைப் பார்க்க வேண்டும்.
தேவனை நம்ப வேண்டும்.
எவரையும் மன்னிக்க வேண்டும்.
இந்த 3 காரியங்களையும் நாம் செய்ய வேண்டும். நம் வாழ்வில் சாத்தியமற்ற காரியங்கள் என்று நினைப்பவைகளை எழுதி வைத்து ஜெபிக்க வேண்டும். பேதுரு சிறையில் இருக்கும் போது சபையார் ஜெபித்தார்கள், சொப்பனம் காண்கிறதைப் போல நடந்து எல்லா காவல்களையும் கடந்து வந்தான். தேவனால் அனைத்தும் சாத்தியமாகும். ஆமென்.