Youtube Link
https://www.youtube.com/watch?v=gFeew4Wqs8c
வேதபகுதி: சங்கீதம் 115:9-18
சங்கீதம்115:1-8 (யெகோவா தேவனுக்கும் மற்ற தேவர்களுக்கும் உள்ள வித்தியாசம் கூறப்பட்டுள்ளது.)
சங்கீதம்115:9-18 (யாரெல்லாம் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.)
சங்கீதம்115:12, கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார். கர்த்தர் நம்மை ஆசீர்வதிக்கிறார். இருக்கிற நிலையில் இருந்து நம் எல்லைகளை பெரிதாக்கி வர்த்திக்கப்பண்ணுவார். தேவன் தனி நபரை மாத்திரம் மேன்மை படுத்துகிறவர் அல்ல, குடும்பத்தை அழைத்து குடும்பமாய் ஜனங்களை ஆசீர்வதிக்கிறவர்.
ஆண்டவராகிய தேவன் ஏன் குடும்பத்தை உருவாக்கினார்?
குடும்பம் என்கிற அமைப்பு தேவனுடைய திட்டம். அது மனிதனால் உருவானது அல்ல.
1. உறவோடு இணைந்து வாழ்வதற்காகவே தேவன் குடும்ப அமைப்பை ஏற்படுத்தினார்.
அம்மா-அப்பா, கணவன்-மனைவி (எபே5:21-33). கணவன்- மனைவி உறவு எப்படி இருக்கிறதோ அதனுடைய பிரதிபலிப்பு தான் தேவனோடு இருக்கும் உறவு. நம்முடைய மனதின் அன்பின் ஏக்கத்தை நிறைவேற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தான் குடும்பம். எனவே குறிப்பாக கணவன்-மனைவி. பெற்றோர்-பிள்ளைகள் இந்த உறவுகளில் நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
ஜெபம்: நவம்பர் மாதம் முழுவதும் தினமும் காலை எழுந்தவுடன் முதல் 5 நிமிடம் உங்கள் குடும்ப உறுப்பினர்களை தேவன் தந்தற்காக ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும்.
2. குடும்பம் என்பது தேவன் ஏற்படுத்திய பள்ளி அதில் தான் அன்பையும், குணாதிசயத்தையும் கற்றுக் கொள்ள முடியும்.
திருமண உறவில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உள்ளது. குடும்ப உறவிலும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு. எனவே நாம் அதை கற்றுக் கொள்ளும் மனப்பான்மையோடு வாழவேண்டும். முதலில் அன்பை கற்றுக்கொள்ள வேண்டும். கணவன்-மனைவி, நிபந்தனையற்ற அன்போடு வாழ வேண்டும்.
உதா: தேவன் நாம் என்ன செய்கிறோம் என்ற அடிப்படையில் நம்மை நேசிப்பதில்லை, நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே ஏற்றுக்கொள்கிறார். அதுபோல கணவன், மனைவி உறவும் நிபந்தனையற்றதாய் இருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் அடிக்கடி மன்னிக்கும் மனப்பான்மை வேண்டும்.
நம்முடைய குணாதிசயத்தை வடிவமைக்க கற்றுக்கொள்ள வேண்டும். வாக்குவாதம் விட்டுவிட வேண்டும். ஒருவர் சொல்வதை ஒருவர் கவனிக்க வேண்டும். குடும்பம் என்பது ஒரு குட்டி சபையாக இருக்க வேண்டும். நம்முடைய வீடு தேவ பிரசன்னத்தை உடையதாய், தேவ வார்த்தை நிறைந்ததாய் இருக்க வேண்டும். (உபாகமம்6:6,7. நீதிமொழிகள் 22:6)
ஜெபம்: மதியம் 5 நிமிடம் நேரமெடுத்து ஆண்டவரே நான் என் குடும்பத்தில் என்ன கற்றுக் கொள்ள வேண்டுமோ அதை கற்றுக்கொள்ள உதவி செய்யும் என கேட்க வேண்டும்.
3.
குடும்பம்
என்பது நம்முடைய வளர்ச்சியையும், நாம் பெருகப் பண்ணுவதற்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட திட்டம்.
உதா: எலியா, சாறிபாத் விதவை வீட்டில் ஏற்பட்ட பெருக்கம் அவள் குடும்பத்தார் முழுவதையும் ஆசீர்வதித்தது.
ஜெபம்: தினமும் படுக்கும் முன் ஆண்டவரே நீர் என் குடும்பத்தை ஆசீர்வதியும் என்று சொல்லி ஜெபிக்க வேண்டும்.
என் குடும்பத்தில் நன்மை உண்டாகட்டும்.
என் குடும்பத்தில் பெருக்கம் உண்டாகட்டும்.
என் குடும்பத்தில் இருக்கிற நன்மை குறைந்து போகாமல் இருக்க வேண்டும். என ஒவ்வொருநாளும் நம் குடும்பத்திற்காக ஜெபிக்க வேண்டும். ஆமென்.