Youtube Link
https://www.youtube.com/watch?v=0wdBRUOV2DY
வேதபகுதி: எரேமியா 32:17-27
ஆதியாகமம்18:14 (கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?)
எரேமியா32:17 (உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.)
எரேமியா32:27 (என்னாலே(கர்த்தர்) செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?)
மத்தேயு19:26 (தேவனாலே எல்லாம் கூடும்.)
லூக்கா1:37 (தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான்.)
கி.மு 587- ம் ஆண்டு எரேமியா தீர்க்கதரிசி, சிதேக்கியா ராஜா ஆட்சி செய்யும் போது தீர்க்க தரிசனம் உரைத்தார். நிச்சயமாய் சிறைப்பட்டு போவோம் என்று ராஜாவுக்கு நேராகவே தீர்க்கதரிசனம் உரைத்ததால், யூதா ராஜாவின் அரண்மனையிலுள்ள காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருந்தான்.
1. எரேமியா32:7-15 (கர்த்தர் யுத்தத்தின் நாட்களில் ஒரு இடத்தை வாங்க சொல்கிறார்.)
2. எரேமியா32:16-25 (எரேமியா தேவனை நோக்கி ஏறெடுக்கிற ஜெபம்)
3. எரேமியா32:26-44 (எரேமியாவின் ஜெபத்திற்கான தேவனின் பதில்.)
இந்த அதிகாரத்தில் மைய வசனம்: எரேமியா32:27 (இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ?)
பல நேரங்களில் நம்முடைய வாழ்க்கையில் தேவன் ஏன் இதை செய்ய சொல்கிறார் என்று நமக்கு புரிவதில்லை. தேவன் நம்மோடு பேசி, எதை செய்ய சொல்லுகிறாரோ, தேவன் தான் இதை செய்ய சொல்லுகிறார் என்ற உறுதி நமக்குள் இருக்குமானால், நாம் அதை தைரியமாய் செய்ய வேண்டும். எல்லா காரியங்களையும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது.
1. எரேமியா யுத்த நாட்களாய் இருந்தாலும் தேவன் நிலத்தை வாங்க சொல்லியதால் அதற்கான காரணம் புரியவில்லையென்றாலும் நிலத்தை வாங்கினான். தேவன் சொன்னதை செய்தான்.
உதா: இயேசு கூறியதை கேட்டு, வேலைக்காரர்கள் கற்சாடியில் தண்ணீரை, கேள்வி கேட்காமல் ஊற்றினார்கள். தண்ணீர் திராட்சை ரசமாக மாறியது. (காரியம் புரிந்தாலும் புரியாவிட்டாலும் தேவன் சொல்லுவதை அப்படியே செய்ய வேண்டும்.)
2. எரேமியா32:17-25 (எரேமியா ஜெபித்தார்) தேவனை யார் என்றும், அவர் எப்படிப்பட்டவர் என்றும், தன்னுடைய விசுவாசத்தை அவருடைய ஜெபங்களில் ஏறெடுத்தார்.
• விசுவாசத்தை அறிக்கை செய்தார்.
• பாவத்தை அறிக்கை செய்தார். (எரேமியா32:23,24)
• தன்னுடைய குழப்பத்தை அறிக்கை செய்தார். (எரேமியா32:25) தேவன் ஏன் நிலத்தை வாங்கச் சொன்னார் என்ற குழப்பமான மனநிலையை தேவனிடம் அறிக்கை செய்தான்.
3. தேவன் எரேமியாவின் ஜெபத்திற்கு பதில் கூறினார். (எரேமியா32:26-44) என்னாலே செய்யக்கூடாத காரியம் ஒன்றுண்டோ? என்னால் அனைத்தையும் செய்ய முடியும் என்கிறார். (வல்லமையை வெளிப்படுத்துகிறார்.)
• ஜனத்திற்கு வரும் தண்டனையை வெளிப்படுத்தி மனம்திரும்ப கட்டளையிடுகிறார்.
• மனம் திரும்பின ஜனங்களுக்கு உண்டாகும் ஆசீர்வாதத்தை கூறுகிறார்.
இந்த அதிகாரத்தில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய காரியங்கள்:
அவர் எதை சொல்லுகிறாரோ அதை செய்ய வேண்டும்.
நம்முடைய குழப்பங்களை பாவங்களை அவருடைய சமூகத்தில் அறிக்கை செய்ய வேண்டும்.
அவருடைய பதிலை செவிகொடுத்து கேட்க வேண்டும்.
தேவனாகிய கர்த்தர் அவருடைய கிரியைகளை நம் வாழ்வில் வெளிப்படுத்துவார்.
ஆமென்.