Youtube Link
https://www.youtube.com/watch?v=xSGEhu9I_qo
வேதபகுதி: சங்கீதம்115:9-18
தலைப்பு: எது ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம்.
எந்த குடும்பம், எல்லா சூழ்நிலையிலும் கிறிஸ்துவை மையமாக வைத்து வாழ்கிறதோ அதுவே ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம்.
நம்முடைய ஆசீர்வாதங்கள் அனைத்தும் பணத்தோடு சம்மந்தப்பட்டவைகளாகவே இருக்கிறது. அது தான் ஆசீர்வாதம் என்று நினைக்கிறோம்.
எது உண்மையான ஆசீர்வாதம்?
ஆபிரகாம்- தேவ வார்த்தைக்கு கீழ்படிந்து தன் இனத்தையும், தன் தேசத்தையும் விட்டுபோனான்.
யாக்கோபு- வெறும் கோலும் கையுமாய் தேவனை நம்பி போனான்.
ஆபிரகாம், யாக்கோபு- தேவனை மையமாய் வைத்து செயல்பட்டார்கள்.
எபேசியர்3:19 அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, நமக்கு அநுக்கிரகம் பண்ணுவார். நம் தேவன் யாராக இருக்கிறாரோ அவர் தனக்கு உண்டானவைகளை கொடுத்து ஆசீர்வதிக்கிறார். இது தான் மகிமையின் ஐசுவரியம்.
நம்முடைய குடும்பம் தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமாய் இருக்க என்ன செய்ய வேண்டும்?
இயேசு குடும்பத்தின் மையமாய் இருக்க வேண்டும். அப்போஸ்தலர்16:31
இயேசு குடும்பத்தின் மையமாய் இருக்க என்ன செய்ய வேண்டும்?
1. கிறிஸ்து குடும்பத்தின் அஸ்திபாரமாய் இருக்க வேண்டும். மத்தேயு7:24,25. இயேசுவின் வார்த்தையை மையமாய் வைத்து நம்முடைய குடும்பத்தை கட்ட வேண்டும்.
பணத்தை மையமாக வைக்கக் கூடாது பணம் தேவை தான் ஆனால் அது நிரந்தரம் அல்ல, இயேசுவை மையமாய் (அவர் வார்த்தையை) வைத்து வாழ வேண்டும். (உலக கலாச்சாரத்தை மையமாய் வைத்து வாழும் குடும்பங்கள் பெருமழை, பெருங்காற்று அடிக்கும் போது விழுந்து விடும்.)
நம்முடைய குடும்பத்தில் நாம் உண்மையாய் இருந்தால், கடினமாய் உழைத்தால் போதும் என்று இருக்கிறோம் ஆனால் அது தவறு. நம்முடைய குடும்பம் அடுத்த நிலைக்கு முன்னேற பெருமழை வரும் போது காற்று அடிக்கும் போது நிலைத்திருக்க தேவகரம் முக்கியம்.
• நம்முடைய குடும்பத்தின் தீர்மானங்கள் வேதத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
• நம்முடைய குடும்பத்தின் மையமாய் இயேசுவை அவருடைய வார்த்தையை வைக்க வேண்டும்.
2. இயேசு நம் குடும்பத்தின் தலைவராய் இருக்க வேண்டும்.
மல்கியா3:16 நாம் பேசும் வார்த்தைகளை நம் வீட்டின் தலைவர் -கிறிஸ்து கவனித்துக் கேட்கிறார். கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கக் கூடாது. குடும்பத்தில் பயன்படுத்த கூடாத வார்த்தைகள் (பிறர் மனதை காயப்படுத்தக் கூடிய வார்த்தைகள்) பேச கூடாது.
உதா: உனக்கு ஒன்றும் தெரியாது. நீ பிரயோஜனமற்றவன் என்ற வார்த்தைகளை பேசக் கூடாது.
கொலோசெயர்3:17 நம் வீடுகளில் நம் வார்த்தை எப்படி இருக்கிறது?
நம்முடைய கிரியை எப்படியிருக்கிறது?
செய்கைகளில் நாம் கவனமாக இருக்க வேண்டும். கொலோசெயர்5:23,24 நம் வீட்டிற்குள் நாம் எதை செய்தாலும் அதைக் கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய் செய்ய வேண்டும். இயேசு நம் குடும்பத்தின் தலைவர் எனவே நம் வார்த்தையிலும் செயலிலும் கவனம் வேண்டும்.
3. கிறிஸ்து உறவுகளை வடிவமைக்கிறார்.
இயேசுவை போல் எல்லாரையும் நேசிக்க வேண்டும். இயேசு காட்டிக் கொடுத்தவனையும், மறுதலித்தவனையும் நேசித்தார். அந்த அன்பு நமக்குள் வேண்டும். சீஷர்களுக்கு சேவை செய்தார். பிறரை மன்னித்தார். மற்றவர்களை மதித்தார்.
அவரைப் போல் நாமும் சேவை செய்ய வேண்டும். மன்னிக்க வேண்டும். பிறருக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இயேசுவை போல செயல்பட வேண்டும் அது நம் குடும்பத்தை வடிவமைக்கும். ஆமென்.