Youtube Link
https://www.youtube.com/watch?v=1zeasJ1hCnM
வேதபகுதி: சங்கீதம்115:9-18
ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் உள்ள முக்கியமான மதிப்பீடுகள்:
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அடிப்படை கொள்கைகள் உண்டு, சில பழக்கங்களை நம் குடும்பத்தில் நாம் முக்கிய கொள்கைகளாய் (வழக்கங்களாய்) கொண்டுள்ளோம்.
இதுபோல வேதத்தின் அடிப்படையில் இயேசுவை ஆராதிக்கும் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் இருக்க வேண்டிய முக்கியமான மதிப்பீடுகள் (கொள்கைகள்) என்ன?
யோசுவா24:15 யோசுவா நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம் என்றான். கர்த்தரை சேவிக்கும் நாம் எப்படி இருக்க வேண்டும்?
• அன்பு: குடும்பத்தின் இருதயத் துடிப்பாக அன்பு இருக்க வேண்டும்.
யோவான் 13:34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்: நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல ………. . இது தேவன் நமக்கு தந்த குடும்பம் என்று எண்ணி அன்போடு வாழ வேண்டும்.
ஆரோக்கியமாய் ஒரு குடும்பம் வாழ அன்பு அவசியம்.
இயேசுவின் அன்பு எப்படிப்பட்டது?
அவர் அன்பு நிபந்தனையற்ற அன்பு.
அவர் அன்பு மன்னிக்கும் அன்பு.
அவர் அன்பு உதவி செய்யும் அன்பு.
அவர் அன்பு சுயநலமற்ற அன்பு.
அவர் அன்பு எதையும் எதிர்பாராத அன்பு.
அவர் அன்பு தியாகம் செய்யும் அன்பு.
இந்த அன்பின் பல பரிமாணங்களை உடையவராய் இயேசு இருக்கிறார். இந்த இயேசுவின் அன்பை முதலில் நாம் அனுபவித்தால் தான் நம்முடைய குடும்பத்தில் அது பிரதிபலிக்கும். ஒரு கிறிஸ்தவ குடும்பத்தின் அடிப்படைக் கொள்கையே அன்பாய் இருப்பது தான்.
1கொரிந்தியர்13 அன்பு குறைகளைப் பார்க்காது, திரளான பாவங்களை மூடும் -அதாவது தவறுகளை மன்னிக்கும் தன்மை உடையது. முதலில் நம் இருதயத்தில் தேவ அன்பு ஊற்றப்பட வேண்டும். நாம் அவருடைய அன்பை நம் குடும்பத்தில் வெளிப்படுத்த வேண்டும், அது குடும்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனவே தினமும் நாம் தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும்.
ஜெபம்:
ஆண்டவரே உம்முடைய அன்பை நான் ருசிக்க வேண்டும். உம்முடைய அன்பை நான் என் குடும்பத்தில் வெளிப்படுத்த வேண்டும்.
• விசுவாசம்: வீட்டின் அஸ்திபாரமாக இருக்க வேண்டும்.
ஒரு நபருக்குள் இருக்கும் விசுவாசம் அந்த குடும்பத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
உதா: ஆபிரகாமின் விசுவாசம் அவன் குடும்பத்திற்குள் அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்ல, ஆபிரகாமின் விசுவாசம் இன்றும் நமக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உதா: நகோமி-ரூத், ரூத்தின் விசுவாசம் நகோமியின் கசப்பான அனுபவத்தை மாற்றியது.
உதா: அந்திரேயாவின் விசுவாசம் பேதுருக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே நம்முடைய விசுவாசமும் நம் குடும்பத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
பயிற்சி:
நம் வீட்டின் ஒரு புற சுவரை ஜெப சுவராய் மாற்ற வேண்டும். அதில் ஜெபக் குறிப்புகளை எழுதி ஒட்டி அனைவரும் கைவைத்து ஜெபிக்க வேண்டும். பதில் தந்த ஜெபத்திற்கு நன்றி சொல்லி எழுதி ஒட்ட வேண்டும். இதை போல் ஜெப சுவரை உருவாக்கி ஜெபிக்க வேண்டும்.
• உண்மையும் உத்தமமும்: குடும்பத்தின் வெளிச்சமாய் இருக்க வேண்டும்.
முதலில் நம் குடும்பத்தில் உள்ள நபர்களிடம் நாம் பொய் சொல்லக் கூடாது. வெளி21:8. வீடு நம்மை யார் என்று காட்டும் இடமாக இருக்க வேண்டும், அங்கேயும் நாம் பொய்யாய் இருக்க கூடாது. நீதிமொழிகள்20:7
ஜெபம்:
ஆண்டவரே நான் பொய் பேசாத நபராய் என் வீட்டில் இருக்க உதவி செய்யும்;. ஆமென்