Youtube Link
https://www.youtube.com/watch?v=bIQQeSXw9Xs
வேதபகுதி: சங்கீதம் 115 : 9-18
தலைப்பு: எது ஆரோக்கியமான குடும்பம்?
ஒரு குடும்பம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் இந்த 3 முக்கியமான காரியங்கள் குடும்பத்தில் இருக்க வேண்டும்.
• சட்டங்கள்.
• பொறுப்புகள்.
• பழக்கவழக்கங்கள்.
குடும்பங்கள் ஆரோக்கியமாய் இருக்க தேவன் விரும்புகிறார். சரீரத்தில், உறவுகளில் வாழ்க்கையில் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும்.
குடும்ப ஆரோக்கியத்திற்கான வசனங்கள்:
எபேசியர்5:21 முதல் எபேசியர்6:4 வரை
நீதிமொழிகள்22:6 நீதிமொழிகள்31:10-31
கொலோசெயர்3:18-21
1பேதுரு3:1-4
அப்போஸ்தலர் 2:42
இந்த வேத பகுதிகளை அடிப்படையாக வைத்து இன்று 3 காரியங்களை நாம் கற்றுக் கொள்ளப்போகிறோம். இந்த 3 காரியங்களும் நம் வாழ்வின் தூண்களாக இருக்க வேண்டும். கிறிஸ்துவை அஸ்திபாரமாக வைத்து இந்த 3 காரியங்களையும் நம் வாழ்வில் செயல்படுத்துவோமானால் நம் குடும்பத்தில் அன்பும் சமாதானமும் இருக்கும்.
1. என்னென்ன சட்டங்கள்
வேதவசனத்தின் அடிப்படையில் குடும்பத்தில் இருக்க வேண்டும்?
எதற்காக இந்த சட்டங்கள் என்றால் இந்த சட்டங்கள் தான் நம்முடைய குணாதிசயத்தை வடிவமைக்கும். ஒரு அமைப்பையும், பாதுகாப்பையும் கொடுக்கும். சுயக்கட்டுப்பாட்டையும், பொறுப்புணர்வையும் வளரசெய்யும். ஆசீர்வாதத்திற்கு நேராய் நம்மை நடத்தும் எனவே சட்டங்கள் நம் குடும்பத்திற்கு அவசியமான ஒன்றாகும். அது நம் குடும்பத்திற்கு ஆரோக்கியமானது.
2. நாம் நிறைவேற்ற
வேண்டிய பொறுப்புகள் (கடமைகள்):
எபேசியர் அதிகாரம் 5, கொலோசெயர் அதிகாரம் 3
குடும்ப தலைவனின் பொறுப்புகள்: குடும்பத்தை நிர்வகிப்பது. குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவது. ஆவிக்குரிய வாழ்க்கையில் குடும்பத்தை நடத்துவது.
மனைவியின் பொறுப்புகள்: குடும்பத்தின் நபர்களை போஷிப்பது. போஷிப்பது என்பது உணவு மட்டுமல்ல அன்பும் அடங்கும். நீதிமொழிகள் 31:15 குடும்ப காரியங்களை மேற்பார்வையிடும், பராமரிக்கும் பொறுப்பு மனைவிக்குரியது. ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உதவி செய்வது பெண்களுக்குரியது.
பிள்ளைகளின் பொறுப்புகள்: எபேசியர்6:1-3 பெற்றோரை கனம் பண்ண வேண்டும், வீட்டு வேலைகளில் பெற்றோருக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும்.
இப்படியாக அவரவர் பொறுப்புகளை குடும்பத்தில் உள்ள நபர்கள் சரியாய் நிறைவேற்ற வேண்டும். அப்பொழுது தான் அந்த குடும்பம் ஆரோக்கியமாய் இருக்கும்.
3. பழக்கவழக்கங்கள்:
தொடர்ந்தேர்ச்சியாக நம் குடும்பத்தில் செய்யும் சில பழக்கவழக்கங்கள் இருக்க வேண்டும். தினமும் என்ன செய்ய வேண்டும்? வாரம் தோறும் என்ன செய்ய வேண்டும்? மாதம் தோறும் என்ன செய்ய வேண்டும்? என்று திட்டம் செய்து பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும். அப்போஸ்தலர்2:42 சில பழக்கவழக்கங்களை ஏற்படுத்தி கொள்ளுங்கள், அவைகள் தேவ நாமத்தை உயர்த்தட்டும். ஆமென்.