×

Youtube Link

https://www.youtube.com/watch?v=s-8_cRyanuA


வேதபகுதி : மத்தேயு 19:16-26

இந்த வேதபகுதி 4 முக்கிய காரியங்களை உள்ளடக்கியது.

             பொதுவாக எல்லா மனிதர்களும் நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்ள எந்த நன்மை செய்ய வேண்டும் என்று கேள்வி கேட்பது போல் இந்த வாலிபனும் கேள்வி கேட்கிறான்.

             இருதயத்தின் அர்ப்பணிப்பை தேவன் வலியுறுத்துகிறார்.

             உலகப்பொருட்களோடு நம் இருதயம் சிக்கிவிட்டால் ஆவிக்குரிய காரியத்தில் ஈடுபட முடியாது.

             தேவனால் எல்லாம் கூடும் என்பதை நாம் நம்ம வேண்டும்.

 மத்தேயு 19:26 மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். இன்று இந்த வசனத்தை நாம் தியானிக்க போகிறோம்.

நம்முடைய வாழ்வில் நாம் ஏராளமான நம்பிக்கையற்ற சூழ்நிலையை சந்திக்கிறோம். நம்முடைய அறிவும் நம்முடைய ஞானமும் தோற்றுப் போகும் சூழ்நிலைகள் வரும், ஆனால் அதை மேற்கொள்ள மனுஷனால் கூடாதது தான் ஆனால் தேவனால் எல்லாம் கூடும். மனிதர்களாய் இருக்கும் நமக்கு நிறைய வரைமுறைகள் உண்டு.

உதா: ஒரு நேரத்தில் ஒரு இடத்தில்; தான் நம்மால் இருக்க முடியும். ஒரு நேரத்தில் ஒரு வேலையை தான் செய்ய முடியும். இதை புரிந்து கொள்ளும் போது தான் நாம் தேவனை சார்ந்து கொள்ள முடியும்.

நம்முடைய ஞானம் வரைமுறைக்குட்பட்டது.

நம்முடைய மனதை நம்மால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிவதில்லை.

நம்முடைய பெலத்தினால் ஞானத்தினால் எல்லாக் காரியத்தையும் செய்ய முடியாது.

நீதிமொழிகள்30:18,19. பிரசங்கி11:5. மனிதனுடைய ஞானத்தினால் அனைத்தையும் புரிந்து கொள்ள முடியாது. தேவனுடைய செயல்கள் மனிதனுடைய புத்திக்கும் சிந்தைக்கும் அப்பாற்பட்டது.

 தேவனோ சர்வ ஞானியாய் இருக்கிறார். நம்முடைய அதிகாரம் பெலன் மிக மிக குறுகியது.

யோவான்19:11 தேவனுடைய அதிகாரத்தினால் தான் அனைத்தையும்செய்ய முடியும்.

  யோசேப்பிற்காக தேசத்தில் தேவன் பஞ்சத்தை ஏற்படுத்தினார்.(வாக்குத்தத்தம் நிறைவேற)

நம்முடைய அதிகாரம் பெலன் அனைத்தும் குறுகினது. நம்முடைய நீதி குறுகினது.  (ரோமர்7:18,19) ஏசாயா 64:5 நாம் நம்முடைய வரையறைகளை தேவ சமூகத்தில் ஒப்பு கொள்ள வேண்டும். தேவனுடைய வல்லமைக்கு வரைமுறையே கிடையாது. ஒன்றுமில்லாததிலிருந்து அனைத்தையும் உண்டாக்கினவர் நம் தேவன். அவர் வல்லமை மாத்திரமல்ல தேவனுடைய அன்பும் ஒரு நாளும் மாறாது.

இயேசு சிலுவையில்  கள்ளனிடம் கடைசி நிமிடத்தில் கூட தன்னுடைய அன்பை வெளிப்படுத்துகிறார்.

தேவனுடைய திட்டத்தை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது. தேவனுடைய வல்லமையை விசுவாசித்து அவருடைய வார்த்தையை அறிக்கையிட்டு தேவனுடைய சித்தம் வரும்வரை(நடைபெறும் வரை) நாம் காத்திருக்க வேண்டும். உன்னால் முடியாது என்று உலகம் நம்மிடம் சொல்லும். ஆனால் உன்னால் முடியாததை நான் உனக்காக முடிப்பேன் என்று தேவன் சொல்லுகிறார். நம்மால் முடியாத இடத்தில் தான் நமக்காய் செயல்படும் நமக்கான காரியத்தை தேவனுடைய வல்லமை செய்து முடிக்கும். மனுஷரால் இது கூடாததுதான் தேவனாலே எல்லாம் கூடும்.

ஆமென்.






Blog Categories

Related Posts

×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God