Youtube Link
https://www.youtube.com/watch?v=X-rVNtl2hBo
வேதபகுதி: மல்கியா1:6-14
அரைகுறை இருதயத்தோடு ஆராதிக்கிற ஜனங்களை தேவன் எப்படி பார்க்கிறார்? என இன்று தியானிக்க போகிறோம்.
உபாகமம் 4:29, 10:12,30:10. முழு இருதயத்தோடு தேவனைத் தேடும்போது அவர் நம்மேல் சந்தோஷமாயிருப்பார்.
நீதி3:5, மத்தேயு22:37, லூக்கா10:27.
முழுஇருதயத்தோடு அவரை தேடவேண்டும், நம்ப வேண்டும், சேவிக்க வேண்டும், அவரிடத்தில் நம்மை அர்ப்பணிக்க வேண்டும், அவரிடத்தில் அன்பு கூற வேண்டும். ஜனங்கள் அரைகுறை இருதயத்தோடு தேவனை தேடினதை தேவன் அருவருத்தார்.
நாம் எப்படி தேவனை தேடுகிறோம்? எப்படி தேவனிடத்தில் அன்பு கூறுகிறோம்?
ஏசாயா 29:13, இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் வெறும் உதடுகளினால் தேவனை கனம் பண்ணுகிறார்கள். ஆனால் இருதயமோ தேவனை விட்டு தூரமாய் விலகி இருக்கிறது.
அரைகுறை இருதயத்தோடு தேவனை ஆராதிப்பதினால் ஏற்படும் பிரச்சனைகள் (மல்கியா 1:6-14) இதில் சொல்லப்பட்டுள்ளது, நான் பிதாவானால் என் கனம் எங்கே? என தேவன் கேட்கிறார்.
(மல்கியா 1:7,8) என்பீடத்தின் மேல்……… உன் முகத்தை பார்ப்பேனோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார். நம்முடைய வாழ்வின் மிகமுக்கியமான பகுதி (25-60வயது)அதை தேவனுக்கு நாம் கொடுக்க வேண்டும்.
அதிகாலை 3-5 மணி இதுதான் ஒருநாளின் சிறந்த நேரமாக கருதப்படுகிறது. இந்த நேரத்தை தேவனுக்கு கொடுக்கிறோமா? இந்த வாரத்தில் முழுமனதோடு, முழுஇருதயத்தோடு, முழுஆத்துமாவோடு ஆராதிக்க 10 நிமிடத்தை ஒதுக்கி கொள்வோம்.
முதல் காணிக்கை, முதல் சம்பளம்,…….. (எல்லாவற்றிலும் முதன்மையானது தேவனுக்குரியது.) நாம் என்ன கொடுக்கிறோம் என்பதை வைத்து நாம் ஒரு நபரை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும். லூக்கா 21:1,2. நாம் என்ன மனநிலையில் தேவனுக்குக் கொடுக்கிறோம் என்பதை தேவன் கவனிக்கிறார். ஏசாயா 29:13 இந்த ஜனங்கள் தங்கள்…..மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. தேவனுக்கு அருகில் இருக்கிறோமா? தேவனோடு நம்முடைய இருதயம் இசைந்து இருக்கிறதா? என சோதித்து பார்க்க வேண்டும்.
தேவனை ஆராதிக்கும் 3 நிலைகள்:
1. தேவனுக்கு மனதார நன்றி செலுத்துதல்.
2. தேவனை இருதயம் நிரம்பி துதித்தல். (புகழுதல்)
3. அவருடைய பரிசுத்தத்தின் மகத்துவத்தை உணர்ந்து அவரோடு இசைந்து கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் தேவனை ஆராதிக்கும்போது தான் அவருடைய பிரசன்னத்தை, மகத்துவத்தை உணரமுடியும். இந்த நிலையில் நாம் இருக்கும் பொழுது தான் தேவன் நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்துவார்.
அவரை நேசித்தாலும், ஆராதித்தாலும் நம்பினாலும் முழு இருதயத்தோடு நாம் அதை செய்ய வேண்டும். ஆமென்.