Youtube Link
https://www.youtube.com/watch?v=BzDW9xEMzXE
வேதபகுதி: யோசுவா1:9. பலங்கொண்டு திடமனதாயிரு, திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருக்கிறார் என்றார்.
யோசுவாவைக் குறித்த 3 காரியங்கள்:
• யார் இந்த யோசுவா?
• ஏன் தேவன் யோசுவாவை பார்த்து-
பலங்கொண்டு, திடமனதாயிரு என்று சொல்ல வேண்டும்?
• எப்படி நாம் பலங்கொண்டு திடமனதாயிருக்க முடியும்?
இதற்கான விடையாக இப்பிரசங்கம் அமையும்.
யாத்திராகமம் 24:13ல், மோசேயின் ஊழியக்காரன். பின்னர் மோசேயின் வாரிசு தலைவராக மாறினார்.
யோசுவா 40 வருடம் எகிப்தில்,
40வருடம் வனாந்திரத்தில்,
தற்போது யோசுவா 80 வயது நிரம்பியவன்.
யோசுவா1:5,6- பலங்கொண்டு திடமனதாயிரு என்ற வார்த்தை முதல் அதிகாரத்தில் 4 முறை காணப்படுகிறது. (1:6,7,9,18)
குறிப்பாக
யோசுவாவிடம் ஏன் பலமாகவும் தைரியமாகவும் இருக்க வேண்டும் என்று சொன்னார்?
யாத்திராகமம் 17ல், முதன்முதலில் யோசுவா அறிமுகப்படுத்தப்படுகிறார். அவர் அமலேக்கியர்களுடன் போரிடும் ஒரு போர்வீரன்.
மோசே தனது கைகளை உயர்த்தும்போது, யோசுவா போரில் போராடி வெற்றி பெற்ற போது, மோசேயின் கையை உயர்த்த, ஆரோனும் ஊரும் உதவினார்கள்.(யாத் 17:12)
யோசுவா ஒரு வலிமைமிக்க மனிதர், தேவன் அந்த நபரிடம் மீண்டும் அவர் வலிமையானவராக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்.
ஏன் யோசுவாவை பார்த்து இப்படி சொல்ல வேண்டும்?
1. புதிய தலைமுறையை கானானுக்குள் கொண்டு செல்ல வேண்டும்.
2. தேசத்தை கைப்பற்றி பங்கிட வேண்டும்.
புதிய தலைமுறையை கானானுக்குள் கொண்டு செல்ல வேண்டும்
• புதிய தலைமுறை- இதுவரை கானானை பார்த்திராத ஜனங்கள்.
• ஆவலாய், ஆர்வத்தோடு இருந்த ஜனம்.
• சரியான நோக்கத்தை யோசுவா அவர்களுக்கு சொல்ல வேண்டும்.
தேசத்தை கைப்பற்றி, பங்கிட வேண்டும்.
இந்த தேசத்தை ஆண்ட பல்வேறு பிற பேரரசுகளால் ஒடுக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டனர்.
பாபிலோனியா பேரரசு,
பாரசீகப் பேரரசு,
கிரேக்கப் பேரரசு,
ரோமப் பேரரசு,
பைசண்டைன் பேரரசு,
• ஆபிரகாமுக்கு 3,00,000 சதுர மைல்- தாவீது, சாலமோன் காலத்தில் கொஞ்சம் கைப்பற்றினார்கள், தற்போது இஸ்ரவேல் வெறும் 8,100 சதுர மைல் மட்டுமே கைப்பற்றினார்கள்.
• தேவன் வைத்திருந்த முழுமையான வாக்குத்தத்தத்தை இன்றளவும் சுதந்தரிக்கவில்லை.
• இது மிகப்பெரிய வேலை உங்களையும் மிக பெரிய வேலைக்கு தேவன் அழைக்கிறார்.
• தேவன் என்ன நோக்கத்தை இஸ்ரவேலுக்கு வைத்திருந்தார். அவர்கள் என்ன ஆக்கிரமித்திருந்தார்கள் என்றால் மிகக்குறைவு.
எப்படி பலங்கொண்டு திடமனதாயிருக்க முடியும்?
1. தேவபிரசன்னத்தினால் வழி நடத்தப்படும் போது. (1:5,9)
1:5,9,17- தேவனின் பிரசன்னம் உங்களுடன் இருக்கும் (தேவனின் பிரசன்னத்தை நினைவுபடுத்தியது)
யோர்தானை நடக்கும்போது ஜனங்களுக்கும் ஆசாரியர்களுக்கும் அரைமைல் தூரம் பின்வர வேண்டும் (இடைவெளி இருக்க வேண்டும்), பின் தொடர வேண்டும்.
ஜனங்கள் உடன்படிக்கை பெட்டியை பின்பற்ற வேண்டும். ஜனங்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பூமியை சுதந்தரிக்க போகிறார்கள், ஆனால் தேவன் சொல்லுகிறார்-நீங்கள் பட்டயத்தை கூர்மையாக்க வேண்டும், உங்களை சுத்திக்கரித்து கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார்.
2. தேவனுடைய வார்த்தையின்படி நடக்க வேண்டும்.
1:7 – நியாயப்பிரமாணத்தின்படி, அவருடைய வார்த்தையின்படி கடைப்பிடிக்கவும்.
யோவான் 8:31,32 கூறுகிறது, நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் (விசுவாசத்திலும், வார்த்தையிலும் நடக்கவும்.) மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்.
தேவனுடைய பிரசன்னம் நமக்கு முன்பாக கடந்து செல்ல நம்மை அர்ப்பணிப்போம்.
தேவனுடைய வார்த்தை நம் வாழ்க்கையில் இடம்பெற ஒப்பு கொடுக்கும் போது நம் பயங்களை எடுத்துபோடுவார். ஆமென்.