Youtube Link
https://www.youtube.com/watch?v=mSSySCWJ8No
லூக்கா 11:1-4
பரமண்டல ஜெபம்
நம் அன்றாட வாழ்வில் தனித்து ஜெபிக்கும் பழக்கம் நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும்.
நம்முடைய ஜெப நேரத்தில் தேவனை மகிமைப்படுத்துவதற்கு அதிக நேரத்தை செலவிட வேண்டும் பின்பு நமது பிரச்சனைகளையும், விண்ணப்பங்களையும் சொல்ல வேண்டும்.
ஜெபத்தில்
உள்ள முக்கியமான 5 காரியங்கள்
1. உறவு
2. பயபக்தி
3. கர்த்தரை சார்ந்து கொள்வது
4. மன்னிப்பு
5. பாதுகாப்பு
நாம் ஆரோக்கியமாய் வாழ்வதற்கு இந்த 5 காரியங்களும் முக்கியமானது. எனவே தான் தேவன் இவைகளை இணைத்து ஜெபிக்க கற்றுத்தருகிறார்.
பரமண்டலத்திலிருக்கும் எங்கள் பிதாவே
1. உறவு : நம்முடைய தனிஜெபம் தேவனோடு உறவு கொள்வதற்கு முக்கியமானது. தனி ஜெபம் இயல்பாக இருக்க வேண்டும். தேவனோடு பழக பழக ஜெப நேரம் நீடிக்கும். நாம் தேவ உறவில் வளர முடியும்.
சங்கீதம் 50:21 – உறவில் அடிப்படையில் தேவனிடத்தில் செல்லும் போது நம்முடைய குறைகளை நம் முன் நிறுத்துவார். அதிலிருந்து வெளியே வர உதவி செய்வார்.
ஜெபம் என்பது குடும்ப உரையாடல் அதை புரிந்து கொள்ள வேண்டும் (தகப்பன் - பிள்ளை உறவு)
2. உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக
தேவனுடைய நாமம் எப்போதும் நம்முடைய சிந்தையிலும், வாழ்விலும் உயர்ந்திருக்க வேண்டும். நம்முடைய ஜெபத்தில் அவர் நாமத்தை உயர்த்தும் போது நமக்குள் விசுவாசம் ஏற்படும். (பிலி 2;10, யோவான் 14:13,14) இயேசுவின் நாமம் மகிமையானது நிறைய நேரங்களில் நாம் சரியாய் அனுபவிப்பது இல்லை.
இயேசுவே… தாவீதின் குமாரனே எங்களுக்கு இரங்கும் என்று அவருடைய நாமத்தை கூப்பிட்டு பார்வையடைந்தார்கள். அவருடைய நாமத்தை சொல்லும் போது ஒரு நிம்மதி நமக்குள் ஏற்படும்.
3. உம்முடைய ராஜ்யம் வருவதாக உம்முடைய சித்தம் பரமண்டலத்தில் செய்யப்படுவது போல பூமியிலேயும் செய்யப்படுவதாக
நமக்கு நிறைய சுய விருப்பங்கள் இருந்தாலும் அவருடைய விருப்பத்திற்கு நம்மை விட்டுகொடுக்கும் போது அவர் ஆச்சரியமாய் நடத்துவார்.
தேவ சித்தத்தை அநேகர் தங்களுக்கு ஏற்றவாறு வளைக்க விரும்புகிறார்கள் அது தவறு அவர் விருப்பத்திற்கு வளைக்க நம்மை விட்டுகொடுக்க வேண்டும்.
எது நமக்கு சிறந்ததோ எது நமக்கு பெலனுள்ளதோ அதை தான் தேவன் நமக்கு செய்வார். எனவே நாம் கவலைப்படாமல் நம்மை அவருடைய பரிபூரண சித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். ஆமென்