Youtube Link
https://www.youtube.com/watch?v=w6fOodOAr28
வேதப்பகுதி : லூக்கா 2: 1-20
இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையானது அனைவருக்குமான நற்செய்தி.
நாம் கிறிஸ்துவை கொண்டாடுகிறோமா?
அல்லது
கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுகிறோமா?
என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
கிறிஸ்துமஸ் கொண்டாடுவதன் நோக்கம் என்ன?
கொண்டாட்டத்திற்கானக் காரணங்கள்
:
1. தேவன் நம்மை நேசிக்கிறார்.
யோவான் 3:16 ல், தேவன் தம்முடைய……….. அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.
தேவன் நம்மை நேசிக்கிறார் என்ற ஆழமான புரிதல் நமக்கு வேண்டும் -அதுதான் சரியான கொண்டாட்டம். தேவன் அன்பாகவே இருக்கிறார்.
எதன் அடிப்படையில் தேவன் நம்மை நேசிக்கிறார்?
நாம் யாராக இருக்கிறோம் என பார்த்து அவர் நம்மை நேசிப்பதில்லை அவர் அன்பாக இருப்பதினால் நம்மை நேசிக்கிறார்.
அவர் நம்மிடத்தில் அன்பு கூற விரும்புகிறார். அதற்காகவே நம்மைப் படைத்தார். அவருடைய சாயலின்படி நம்மைப் படைத்தார்.
மத்தேயு 1:21 ல், (அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்……… ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்.)
மத்தேயு 1:23 ல், (இதோ ஒரு கன்னிகை …….இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்.)
2. அவர் எப்போதும்
நம்மோடு கூட இருக்கிறார்.
ஏசாயா 43:2 ல், (நீ தண்ணீர்களை…….. அக்கினி ஜூவாலை உன் பேரில் பற்றாது.) நாம் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் தேவன் நம்மோடு கூட இருக்கிறார்.
3. தேவன் நமக்காக இருக்கிறார்.
சங்கீதம் 118:6,7 ல்,கர்த்தர் என் பட்சத்திலிருக்கும் போது எனக்கு எதிராக நிற்பவன் யார்? என்று தாவீது கூறுகிறார். நம்மைக் குறித்து தேவன் எப்போதும் நினைவுடையவராய் இருக்கிறார். நமக்காக இருக்கிறார்.
யோவான் 3:17 ல், (உலகத்தை ஆக்கினைக்குள்ளாக…….. அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.)
இந்த 3 காரியங்களை சிந்தித்து அவரை (கிறிஸ்துவை) கொண்டாட வேண்டும்.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் கேள்விகள்
:
1. இந்த ஆண்டு முழுவதும் தேவன் நம்மை நடத்திவந்திருக்கிறாரே….. என்னென்ன காரியங்களுக்கு நன்றி சொல்லப் போகிறாய்?
2. இப்போதும் வரும் வருடங்களிலும் நீ தேவனுக்கு என்ன பரிசு கொடுக்க போகிறாய்?. இந்த கேள்விகளை சிந்தித்து பார்க்க வேண்டும். ஆமென்.