Youtube Link
https://www.youtube.com/watch?v=I9QTFIeO1ac
தேவனுடைய கிருபை எல்லோருக்கும் இலவசமாகக் கொடுக்கப்படுகிறது. அந்த கிருபையினால் நாம் இரட்சிக்கப்படுகிறோம், ஆசீர்வதிக்கப்படுகிறோம்.
நாம் ஒவ்வொருவரும் விஷேசித்த கிருபைக்காக தேவனிடத்தில் ஜெபிக்க வேண்டும்.
எ.கா: சவுல் ராஜா – தாவீது
ஏசாயா55:3ல்,தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன் என்கிறார்.
தாவீதுக்குள் விஷேசித்தஆவி இருந்ததால், தாவீதுக்கு கிருபையைக் கொடுத்து வெற்றியடைய செய்தது.
40 நாள் கோலியாத்தை பார்த்து சவுல் பயந்து இருந்தான். ஆனால் தாவீதுக்குள் ஒரு விஷேசித்தஆவி இருந்தது, அது விஷேசித்த கிருபையை தாவீதுக்குக் கொடுத்து வெற்றியடைய செய்தது.
தாவீது சுரமண்டலம் வாசித்தால் சவுலுக்குள் இருக்கும் பொல்லாதஆவி நீங்கி ஆறுதலடைந்து சொஸ்தமாவான்.
சாலொமோன் ஆலயத்;தைக் கட்ட, அனைத்து வேலைகளையும் தாவீது ஆயத்தம் செய்தான்.
சவுல், தாவீது இருவருமே ராஜாவாக இஸ்ரவேல் ஜனங்களை 40 வருஷம் ஆண்டார்கள். சவுலுக்கு தேவனுடைய கிருபை இருந்தது. ஆனால் தாவீதுக்கோ தேவனுடைய விஷேசித்தகிருபை இருந்தது. சவுலின் முடிவோ பரிதாபமாய் இருந்தது.
தாவீது எத்தனை முறை தவறு செய்தாலும் தேவ சமூகத்தில் தன்னை அர்ப்பணித்து ஒப்புரவாகிக் கொள்வான். அதனால் தாவீதுக்கு தேவசமூகத்தில் கிருபைக் கிடைத்தது. நாமும் தாவீதைப் போல விஷேசித்த கிருபையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
எ.கா: இயேசுவின் தாயாகிய மரியாளும் - மற்ற கன்னியாஸ்தீரிகளும்.
மரியாள் - கிருபைப் பெற்றவளே வாழ்க என்று காபிரியேல் தூதன் மரியாளை வாழ்த்தும் போது, அநேக பெண்கள் தங்கள் வயிற்றில் இயேசு பிறக்க வேண்டும். என்று காத்திருந்தாலும் மரியாளுக்கு மட்டும் அந்த விஷேசித்தகிருபை கிடைத்தது.
எ.கா: நோவா – ஆதியாகமம் 6:8ல், நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபைக் கிடைத்தது.
ஆதியாகமம் 6:1,2. நோவா காலத்தில் குமாரத்திகள் அநேகர் இருந்தார்கள். ஆண்பிள்ளைகள் குறைவாக இருந்தனர். தேவகுமாரர்கள் மனுஷகுமாரத்திகளை தெரிந்து கொண்டார்கள். இப்படிப்பட்ட மோசமான காலத்தில் வாழ்ந்தவர் நோவா. அந்த காலத்திலும் நோவா நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். அதனால் தான் தேவன் விசேஷித்த கிருபையை அருளினார். நம்மோடு இருப்பவர்கள் எப்படியிருந்தாலும் நம்முடைய வாழ்க்கை சரியாக இருக்க வேண்டும்.
மனிதனுக்கு, தேவனுடைய கிருபை குறைய குறைய ஆயுசுநாட்களும் குறைகிறது(ஆதியாகமம்6:3).
நோவாவின் காலத்தில் ஆயுசு நாட்கள் குறைக்கப்பட்டது.
நோவா காலத்தில் வாழ்ந்தவர்கள் : ஆதி 6:2ல், அதிக சௌந்தரியமுள்ளவர்கள்(குமாரத்திகள்), விழுந்துபோன தேவகுமாரர்கள்(தூதர்கள்), இராட்சதர்கள் (அரக்கர்கள்), மேலும் பலவான்களும் இருந்தார்கள், தேவன் மனஸ்தாபப்பட்ட காலமாய் நோவாவின் காலம் இருந்தது. இந்த சூழ்நிலையில் (ஆதியாகமம்6:8) நோவாவுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
தேவனுக்கு பிரியமாய் வாழ்ந்து, அவருடைய விஷேசித்தகிருபையை பெற்றுக் கொள்ள வேண்டும்.