Youtube Link
https://www.youtube.com/watch?v=h2x8Lu19ZFQ
வேதபகுதி : சங்கீதம் 42
ரூத் 2:12
தலைப்பு : தேவனுடைய செட்டைகளின் கீழ்
தாய்கோழி, தன் குஞ்சுகளை செட்டையில் மறைத்து வைக்கும்போது, குஞ்சு கோழிகளுக்கு வெளியில் இருக்கும் எந்த சூழ்நிலையும் தெரியாது, அது ஒரு பாதுகாப்பான இடம் என்பது மட்டும் தெரியும். செட்டைகளின் கீழ் மறைக்கப்பட்ட சூழ்நிலைகள் நம் வாழ்வில் நடைபெறுகிறது. இதை அடிப்படையாக வைத்து சில காரியங்களை தியானிப்போம்.
சங் 42: 1-3,10 ல், உன் தேவன் எங்கே? என்று தாவீதோடு இருந்தவர்கள் ஏளனமாக பேசினார்கள். இந்த சங்கீதத்தில் தாவீது தன்னுடைய மனதின் பாரத்தை(ஏக்கத்தை) சொல்லுகிறார்.
சங் 42ன், பின்னணியத்தைப் பார்க்கலாம்: தாவீது எழுதி, கோராகின் புத்திரரில் உள்ள இராகத்தலைவனுக்கு கொடுக்கப்பட்ட சங்கீதம். கோராகு(எண்ணாகமம் 26: 9,10) லேவி கோத்திரத்தை சார்ந்தவன், ஒரு காலக்கட்டத்தில் தன்னோடு இருநூற்று ஐம்பது பேரை சேர்த்துக் கொண்டு மோசேக்கு எதிராக செயல்பட்டவன்.
தேவன் ஏற்படுத்தி வைத்த தலைமைக்கு விரோதமாக செயல்பட்டபோது, தேவனுடைய நியாயத்தீர்ப்பிலே கோராகும் அவன் கூட்டத்தாரும் அழிந்து போனார்கள். அவனுடைய புத்திரர் விழிப்புணர்வு வந்து தேவன் ஏற்படுத்தி வைத்த நியமத்துக்கு ஒரு நாளும் எதிர்த்து நிற்கக்கூடாது என்ற உணர்வோடு தங்களை தேவசமூகத்தில் அர்ப்பணித்ததால் , தாவீதின் காலக்கட்டத்தில் கோராகின் சந்ததியை, கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதிக்கிற இராகத்தலைவர்களாகத் தேவன் வைத்திருந்தார். மனந்திரும்பும் போது தேவன் அவர்களை ஏற்படுத்தி வைக்கிற இடம் ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு இந்த நிகழ்வு ஒரு எடுத்துக்காட்டு. தாவீதின் வாழ்க்கை ஒவ்வொரு சங்கீதத்திலும் இணைந்திருப்பதைப் பார்க்கலாம். தாவீது சங் 42ஐ ,தன் மகன் அப்சலோம் தனக்கு விரோதமாக எழும்பி வரும்போது, தாவீது, வெறுங்காலோடு நடந்து போகிறான். சீமேயி தூஷிக்கிறான், தாவீதோடு உடன் வந்தவர்களும் வேதனைப்படுத்தினார்கள், குகைக்குள் அமர்ந்து அழுகிறான், கிட்டத்தட்ட மறைக்கப்பட்ட ஒரு சூழ்நிலை ,தேவாலயத்துக்கு போகமுடியாத ஏக்கம், சுற்றியிருக்கும் ஜனங்கள் உன் தேவன் எங்கே என்று 3,10 ம் வசனத்தில் கேட்கிறார்கள். கடினமான சூழ்நிலையில் மனதில் இருக்கும் பாரங்களை பாடின சங்கீதம் தான் (43 ம் சங்கீதம்.) இது.
நம்முடைய வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட சூழலில் ஒரு உணர்வு – (வெறுமை உணர்வு) , ஒரு கேள்வி –(ஒரு குறிப்பிட்ட காரியத்தை மட்டும் தேவன் ஏன் செய்யவில்லை?) என எழுகிறது. இதற்கு தேவன் தருகின்ற மூன்று பதில்களை பார்க்கலாம்.
தாவீது தனித்து விடப்பட்ட சூழலுக்குள் தள்ளப்படுகிறான். (தனிமை உணர்வு)
1. ஏசாயா 55:8,9ல். என் நினைவுகள்,
உங்கள் நினைவுகள் அல்ல உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி …………. என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
ஆண்டவர் ஒரு வரைப்படத்தை வைத்திருக்கிறார்.
சதுரங்கம் விளையாடும் வெற்றியாளன், தனது இருபத்து ஒன்றாவது ஆட்டத்தை நினைவில் கொண்டு காய் நகர்த்துவான்.
யோசேப்பு சிறைக்கைதி – எகிப்தின் அதிபதி. எந்த நிலையில் இருந்தாலும் தேவன் இதை அனுமதித்திருக்கிறார் என்ற புரிதல் வேண்டும்.
எந்த சூழ்நிலையிலும் தேவன் நம்மோடு இருந்து, பயப்படாதே நான் உன்னோடே இருக்கிறேன் என தேவன் சொல்லுகிற சத்தத்தை கேட்கிறவர்களாக இருக்க வேண்டும்.
2. தேவனுடைய வேளை(குறித்து வைத்த நேரம்) வேறு:
2பேதுரு3:8,9ல், கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம் வருஷம் போலவும்……….. நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
எந்த விஷயத்தில் மனந்திரும்ப வேண்டுமென்று, தேவனிடம் ஜெபித்து மனந்திரும்ப வேண்டும். லூக்கா16: 10,11 ல் , தேவன் எதிர்பார்க்கிற உத்தமத்தன்மை நம்மிடத்தில் இருக்கிறதா? என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
3. நம்முடைய தவறான தெரிந்தெடுப்பினால் உண்டான விளைவு:
நாம் செய்த தவறுக்கான விளைவுகளை நாம் அனுபவிக்கிறோம். நாம் தவறுகளை சரிப்படுத்தும் போது ,தேவன் செயல்படுவார். நாம் தேவன் எதிர்பார்க்கும் அர்ப்பணிப்புக்கும்,மனந்திரும்புதலுக்கும் வரவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அவர்மேல் நம்பிக்கை வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிந்துக்கொள்ள வேண்டும்.
ரோமர் 8:28ல், அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூறுகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். இதை விசுவாசித்து அறிக்கை செய்து ஜெபிக்கும் போது தேவன் நம் வாழ்விலும் கிரியை செய்ய வல்லவராயிருக்கிறார். விசுவாசத்தோடு ஜெபிப்போம். ஆமென்.