Youtube Link
https://www.youtube.com/watch?v=SJF1QIQzfWA
வேதப்பகுதி : ஏசாயா41:10 , நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்……………. உன்னைத் தாங்குவேன்.
மாற்கு 5:36ல், இயேசு ஜெப ஆலயத்தலைவனை நோக்கி, ‘பயப்படாதே விசுவாசம் உள்ளவனாயிரு’ என்றார். மகள் மரித்து விட்டாள் என்ற செய்தியை பிறர் கூறியதும் இயேசு கூறியது இது. நம் வாழ்விலும் சில சூழ்நிலையில் இது முடிந்து விட்டது என நமக்குத் தோன்றினாலும் தேவன் நம்மைப் பார்த்து பயப்படாதே, விசுவாசமுள்ளவளாய் இரு என்று கூறுகிறார்.
1 இராஜா 17:13 ல், எலியா தீர்க்கதரிசி அவளைப் பார்த்து பயப்படாதே என்றார். விசுவாசத்தை செயல்படுத்த வேண்டும். விசுவாசத்;தை செயல்படுத்தியதால் விதவையும் அவள் மகனும் பஞ்ச காலம் முழுவதும் திருப்தியாக உண்டனர். நம் தேவன் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் அற்புதம் செய்கிறவர். நிரம்பி வழியவில்லை ஆனால் பாத்திரத்தில் மாவு குறைந்துப்போகவில்லை.
ஆதியாகமம் 15:1 ல், நாம் பிறரை மன்னித்தால் தேவன் நமக்கு பெரிய பலனைத் தருவார். ஆபிரகாம் லோத்தை மன்னித்து உதவி செய்ததால் தேவன் அவனுக்கு பெரிய ஆசீர்வாதததைக்கொடுத்தார்.
நமக்கு ஏன் பயம் வருகிறது?
1. நிச்சயமற்ற தன்மை : (பிடிப்பில்லாத,தெளிவில்லாத இது தான் நடக்கும் என்று கணித்து சொல்ல முடியாத சூழல்). ஆதியாகமம் 25:21ல், இப்படி ஆனால் எப்படி ஆகுமோ? என்னும் குழப்பம் எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ அப்பொழுது தேவனிடத்தில் நாம் விசாரிக்க வேண்டும். ரெபேக்காள் இதைத்தான் செய்தாள். தேவன் பதில் கொடுத்தார். நம் தேவனாகிய கர்த்தர் பேசும் தெய்வம்.
2. எல்லாம் என் கைவிட்டு போய்விடுமோ? என்ற பயம்:
எல்லாம் தேவனுடைய கரத்தில் இருக்கிறது. தேவன் நமக்கு கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. தேவன் தராததை நாம் பெற்றுக்கொள்ளவும் முடியாது. சிங்காசனம் போய் விடுமோ என்ற பயத்தில் சவுலின் வாழ்க்கை குறிசொல்லுகிறவளிடத்தில் போகும்படி தரம் மாறியது.
3. தோற்றுபோவோமோ என்ற பயம் : ஆயத்தம் ஆகாதவனுக்கு பயம் வரும். ஆதியாகமம் 3:10ல், பாவம் இருந்தால் பயம் இருந்தது. நம்மை நாமே நிதானித்து ஆராய்ந்து பாவத்தை விலக்கினால் தோல்வி பயம் நம்மை விட்டு நீங்கும். நம்முடைய பாவத்தை உணர்ந்துகொண்டு ஜெபிக்கும் போது , நாம் ஏறெடுக்கும் ஜெபத்திற்கு தேவன் பதில் தருகிறார். ஆமென்.