Youtube Link
https://www.youtube.com/watch?v=GGJVKfaGsY4
வேதபகுதி : யோவான் 20:26-31
தலைப்பு: “அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு”
இந்த உலகத்தில் பாவிகளுக்காக மரித்தவர் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார். இயேசு உயிர்த்தெழுந்த பின்பு மரியாளுக்கு முதலில் தரிசனமானார்.
இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை மரியாள், சீஷர்களிடம் சொன்னபோது யாரும் நம்பவில்லை. எம்மாவூர் செல்லும் வழியில் இயேசு தாம் உயிர்த்தெழுந்ததை வெளிப்படுத்தினார். தோமா இவர்கள் சொன்னதை நம்பவில்லை.
(யோவான் 20:27) பின்பு அவர் தோமாவை நோக்கி நீ உன்விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், ….……. அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார்.
தேவனை விசுவாசிக்கிறவர்களிடத்தில் விசுவாசம் பெருக வேண்டும். இதை தேவன் ஒவ்வொரு கிறிஸ்தவர்களிடமும் எதிர்பார்க்கிறார். நம்முடைய விசுவாசம் எப்படியிருக்கிறது?
நாம் ஜெபிக்கும் சில ஜெபத்திற்கு பதில் வராதபோது அவிசுவாசம் வருகிறது.
அன்பின் அழைப்பை தோமாவுக்கு கொடுக்கிறார். (தன்னை தொட்டு பார்ப்பதற்கு ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்தார்)
விசுவாசம் என்பது என்ன?
எபிரெயர்11:1, விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.
தேவனைப் பற்றிய முழுமையான நம்பிக்கை வேண்டும். நம்முடைய தேவன் யார் என்ற புரிதல் நமக்கு வேண்டும். அவர் சர்வவல்லமையுள்ள தேவன். உயிர்த்தெழுந்தவர், அன்புள்ளவர், நன்மை செய்கிறவர், அவர் அனுமதிக்கிற எல்லாமே நன்மைக்காக அனுமதிக்கிறார். ஒருநாளும் தீமை செய்வதில்லை. அவரையும் அவருடைய வார்த்தையையும், கிரியைகளையும் நம்பவேண்டும்.
தோமாவுக்கு சந்தேகம் வரும்போது தேவன் அவனை சந்திக்கிறார். ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் தனித்தனியாக சந்திக்க விரும்புகிறார். நாம் எல்லாவற்றையும் அனுபவித்து பார்த்தால் தான் தேவனை, நம்புவேன் என்றால் இந்த உலகில் வாழ முடியாது ஜெயிக்க முடியாது.
2. விசுவாசம் என்பது நாம் தேர்ந்தெடுக்கிற ஒன்று. நாம் நம்ப வேண்டும் என்ற தீர்மானத்தை நாம் எடுக்க வேண்டும்.
மாற்கு 9:24, (என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும்.)
எபிரெயர்11:6, விசுவாசமில்லாமல் தேவனுக்குப் ……… விசுவாசிக்க வேண்டும்.
எபிரெயர்11:11, விசுவாசத்தினாலே சாராளும் வாக்;குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயது சென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். சிந்தையில் ஒரு தீர்மானம் (எனக்கு வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணுகிற எண்ணம் இருக்கிறதா?)
எபிரெயர்11:18, ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் ………. மரித்தோரிலிருந்தெழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி)
3. விசுவாசம் நம்மை நித்திய ஜீவனுக்குள் நடத்தும்.
யோவான் 20:31, தீர்மானம் எடுத்த பின்பு உங்கள் இருதயத்தை சமாதானம் நிரப்பும். சூழ்நிலைகளை பாராமல் அவருடைய கரத்தைத் தொட்டு விசுவாசத்தை பெருக்கி கொள்வோம். ஆமென்