Youtube Link
https://www.youtube.com/watch?v=Pv_vYl7QoZA
தேவன் நம் வாழ்வில் செயல்பட இடம் கொடுக்க வேண்டும். நாம் இடம் கொடுத்தால் தேவன் கிரியை செய்வார்.
3 விதமான ஆயத்தங்கள் , தேவன் நம்மிடம் எதிர்பார்க்கிறார்:
1. ஆவிக்குரிய ஆயத்தம்
2. ஒழுக்க வாழ்வில் ஆயத்தம்.
3. உறவுகளில் உள்ள சிக்கல்களை சீர்படுத்துவதில் ஆயத்தம்.
ஆவிக்குரிய ஆயத்தம்:
தேவனுக்கும் நமக்கும் இடையேயுள்ள சிக்கல்களை சரிபடுத்துவது.
2 நாளாகமம் 6 – சாலொமோன் மிகப்பெரிய ஆலயத்தைக் கட்டினார். அது மட்டுமல்;ல கருத்தாய் ஒரு ஜெபம் பண்ணினான். எந்த சூழ்நிலையிலும் மக்கள் இந்த ஆலயத்தில் ஜெபிக்கும் போது ஜெபம் கேட்கப்பட வேண்டும் என ஜெபித்தார்.
1. தாழ்த்துதல் வேண்டும்
3. முகத்தைத் தேட வேண்டும்
4. பொல்லாதக் காரியத்தை விட்டு விலக வேண்டும். இவைகளை செய்யும் போது ஜனங்களின் ஜெபத்தை கேட்பேன், மன்னிப்பேன், ஆசீர்வதிப்பேன் என கர்த்தர் கூறுகிறார். எப்பொழுதெல்லாம் தேவவார்த்தைக்குக் கீழ்படிகிறோமோ அப்போதெல்லாம் செழிப்பு உண்டாகும். தேவனுக்கு கீழ்படியாத போது வறுமை உண்டாகும். சரியாய் ஆலோசனை சொல்பவர்கள் பல கோணத்தில் ஆலோசனை சொல்வார்கள். முடிவெடுப்பதை நம் கரத்தில் கொடுப்பார்கள். தேவன் ஆலோசனை கொடுக்கும் போது இதுதான் வழி இதில் நடந்தால் ஆசீர்வாதம் இல்லாவிட்டால் சாபம் எனக் கூறுகிறார்.
நம் சிந்தை எப்படி இருக்கிறது?
தாழ்மை வேண்டும் :
1. 2 நாளாகமம்12 : 5,6 – நம்மை தாழ்த்தும் போது தேவன் உதவி செய்வார். பிலிப்பியர் 2 :5-8 , கிறிஸ்துவின் சிந்தையே நமக்குத் தேவை. கிறிஸ்து காட்டியதே தாழ்மை - இது இருப்பது தான் ஆவிக்குரிய ஆயத்தம். அப்போது தான் தேவமகிமை வெளியரங்கமாகும்.
2. ஜெபம் பண்ண வேண்டும் :
கர்த்தரோடு நேரம் செலவிட வேண்டும். தேவன் பாதத்தில் அமர்ந்து என் வாழ்வில் கிரியை செய்யும் என நம்மை அர்ப்பணிக்கும் போது கர்த்தர் பார்த்துக் கொள்வார்.
3. முகத்தைத் தேட வேண்டும் :
எண் 6 : 25,26. கர்த்தரின் முகத்தைத் தேட வேண்டும்.
சங் 27:8 . கர்த்தர் அவரின் முகத்தின் பிரகாசத்தை நமக்குத் தந்து ஆசீர்வதிப்பார்.
4. பொல்லாத வழிகளை விட்டு திரும்ப வேண்டும் :
2 நாளாகமம் 29,30,31,32. எசேக்கியா ராஜா மக்களை பொல்லாத வழிகளை விட்டு திருப்பினான். தேசத்தில் செழிப்பும் மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் உண்டானது. பொல்லாத வழிகளை விட்டு நாம் விலக வேண்டும். ஆமென்.