Youtube Link
https://www.youtube.com/watch?v=iDw0kLJH1pQ
வேதப்பகுதி : ஏசாயா: 62 ம் அதிகாரம்
இந்த அதிகாரம் ஒரு தீர்க்கதரிசன பாடல் ஆகும். முதல் 5 வசனங்களில் 3 புதிய காரியங்களை தேவன் செய்வதாகக் கூறியுள்ளார். அவை
1. தேவன் ஒரு புதிய நாமத்தை நமக்கு தருகிறார். (ஏசாயா 62:2)
உ.தா: ஆபிராம் - ஆபிராகாம் என தேவன் மாற்றினார். பெயருக்கேற்ற ஆசீர்வாதத்தையும் கொடுத்தார். ஆதி 17:1,15,17(சாராய்), ஆதி 20:1(சாராள்)
2. ஒரு புதிய இடத்தை நமக்கு தேவன் தருகிறார். (ஏசாயா 62:3).
3. ஒரு புதிய சந்தோஷத்தை தேவன் நமக்கு தருகிறார். (ஏசாயா 62:5)
புதியதாய் திருமணமான போது ஏற்படும் சந்தோஷத்தை தேவன் தருகிறார். நாம் இழந்து போன சந்தோஷத்தை தேவன் தருவார். இதை தரும் தேவன் 3 காரியங்களை நம் வாழ்க்கையில் செய்ய விரும்புகிறார்.
ஏசாயா 62:6 ல், உனக்காக ஜெபிப்பதற்கு ஆட்களைக் கொடுப்பேன்.
ஏசாயா 62:8 ல், உன் கைகளின் பிரயாசத்தை நீயே சாப்பிடும்படி உன்னை ஆசீர்வதிப்பேன்.
கர்த்தர் நம்மை வைத்த இதே இடத்தில் புகழ்ச்சியாய் வைப்பார்.
இந்த ஆசீர்வாதங்களை பெற நாம் செய்;ய வேண்டியவைகள் என்னென்ன?
ஏசாயா 62 : 6 ன், பின்பகுதி ஜாமக்காரரைக் கட்டளையிட்டு தேவன் ஏன் நம்மை காக்கிறார்?
அவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும்.
ஏசாயா 62:8,9. நம் கைகளின் பிரயாசத்தை தேவன் சாப்பிட உதவி செய்யும் போது அவரை துதிக்க மறந்து விடக்கூடாது. மற்;றவர்களுக்கு கொடுத்து உதவி செய்து வாழ வேண்டும்.
ஏசாயா 62:7 ல், தேவன் நம்முடைய வாழ்க்கையை ஸ்திரப்படுத்துவதற்கு நம்மோடு இருக்கிறார். எனவே நாம் அவரை சார்ந்து அவர் கிரியை செய்யும் வரை அவரை விடக் கூடாது. மற்றவர்களுக்காக , நமக்காக அவரிடம் மன்றாட வேண்டும். தேவனை அமரவிடாமல் நாம் அவரிடம் கேட்க வேண்டும். ஆமென்