Youtube Link
https://www.youtube.com/watch?v=fxAoF-8gMuw
வேதபகுதி: மத்தேயு 26:36-42
தலைப்பு: ஜெபத்தின் தொடர்ச்சி ……….. ……, ஜெபத்தைக் குறித்து கெத்செமனே என்னும் இடத்தில் சில விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறார்.
அதிலும் குறிப்பாக, மத்தேயு 26:41, நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.
ஆங்கில வேதாகமத்தில் இன்னொரு விளக்கம் இப்படியாய் சொல்லப்படுகிறது. விழித்திரு ஆபத்தில் இருப்பதை அறியாமலேயே சோதனையில் சிக்கிக்கொள்ளாத படிக்கு ஜெபத்தில் இரு. உங்களின் ஒரு பகுதி தேவனுக்குள் எதற்கும் ஆர்வமாகவும் தயாராகவும் இருக்கிறது. ஆனால் நெருப்பின் அருகில் தூங்கும் வயதான நாயைப் போல , சோம்பேறியாக இருக்கும் இன்னொரு பகுதியும் இருக்கிறது.
ஏன் விழித்திருந்து ஜெபிக்க வேண்டும்? நாம் சோதனையில் அகப்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபிக்க வேண்டும். ஜெபம் என்பது தேவனோடுள்ள நல்லஉறவு. நம் வாழ்க்கையைக் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும். 1 பேதுரு 4:7ல், எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று …………. ஜெபம் பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். என்று அப்போஸ்தலனாகிய பேதுரு தன்னுடைய நிருபத்தில் எழுதுகிறார். தேவனோடுள்ள உறவு நன்றாக இருந்தால் நம் வாழ்க்கையைக் குறித்த எச்சரிப்பை தேவன் தருவார். நம்மிடத்திலுள்ள குறைகளை சுட்டிக் காண்பிப்பார். நாம் எதிலிருந்து விலக வேண்டுமோ அதிலிருந்து விலக தேவன் உதவி செய்வார்.
நாம் எதைக்குறித்தெல்லாம் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
(3 முக்கிய விஷயங்கள்)
1. நம் வாழ்வின் நோக்கத்தைக் குறித்து கவனமாய் இருக்க வேண்டும்.
மத்தேயு26:37. சிலுவையில் மரிக்க போவதை இயேசு முன்பே அறிந்திருந்தார். தேவசித்தத்தில் அவருடைய வாழ்க்கை இருந்தது. நம் வாழ்வில் தேவன் நியமித்திருக்கிற பாதையில் போகும் போது பாடுகள் உண்டு. மனதின் குழப்பங்களை தேவனிடம் சொல்ல வேண்டும். அப்பொழுது அவர் நம்மை பெலப்படுத்துவார்.
உ.தா: யோசேப்பு. தேவன் அவருடைய சித்தம் இல்லாமல் ஒன்றையும் நம் வாழ்வில் அனுமதிப்பது இல்லை. எகிப்தில் இஸ்ரவேல் ஜனங்களை பெருகச்செய்து கானானை கொடுப்பதற்காகவே தேவன் அவர்களுக்கு அந்த பாதையை அனுமதித்தார்.
2. தேவையைக்குறித்தும் விருப்பத்தைக்குறித்தும் கவனமாய் இருக்க வேண்டும்.
மாற்கு 14:11. யூதாஸ் காரியோத்து பணத்திற்காக இயேசுவைக் காட்டிக்கொடுக்க தயராய் இருந்தான். லூக்கா 22:4, பிரதான ஆசாரியர்களிடத்தில் ஆலோசனை பண்ணினான். இயேசுவைக் காட்டிக் கொடுத்தவுடன் குற்ற மனசாட்சி ஏற்பட்டு இறந்து போனான். விருப்பங்கள் தவறல்ல. நாம் அதை எந்த வழியில் பெற்றுக்கொள்கிறோம் என்பது முக்கியம். அதைக்குறித்து கவனமாய் இருக்க வேண்டும். பணத்தேவையை தேவனிடம் கேட்க வேண்டும் அவர் நம் தேவையை சந்திப்பார்.
3. நம்முடைய உறவுகளைக்
குறித்தும் பேசுகிற வார்த்தைகளைக் குறித்தும் கவனமாய் இருக்க வேண்டும்.
பெண்கள் தாவீதை உயர்த்தி பாடின போது சவுலுக்குள் காரணமில்லாத பயம் வந்தது. அதனால் தன் ஸ்தானத்தை மறந்து தாவீதைக் கொல்ல செயல்பட்டான். சவுல் தன் மனநிலைமையை தேவனிடம் சொல்லியிருந்தால் தேவன் விளக்கியிருப்பார். தேவனை விட்டு வழி விலகுகிற வார்த்தைகள் யார் மூலமாய் வந்தாலும், நாம் கவனமாய் இருக்க வேண்டும். சாலொமோன் வழிவிலகியதால் தேசத்திற்கே அழிவை உண்டாக்கியது. கலங்கடிக்கிற வார்த்தைகளை பேசுகிறவர்களைக் குறித்து கவனமாய் இருக்க வேண்டும்.
நாம் , நம் மனநிலையை தேவனிடம் வெளிப்படுத்தி விழித்திருந்து ஜெபம் செய்ய வேண்டும். ஆமென்.