Youtube Link
https://www.youtube.com/watch?v=udK_gS0sqTo
தலைப்பு: ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்க்கை
வேதபகுதி: லூக்கா8:48,50,54.
பெரும்பாடுள்ள ஸ்தீரி : இயேசு கடந்தகால பிரச்சனைக்கு தீர்வு கூறினார்.
மகளே திடன்கொள் உன் விசுவாசம் உன்னை
இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.
யவீரு : இயேசு நிகழ்காலப் பிரச்சனையைப்பார்த்து கூறினார்.
பயப்படாதே விசுவாசமுள்ளவனாயிரு என்றார்.
மரித்துப்போன சிறுபெண்: மரித்துப்போன சிறுபெண்ணின் எதிர்காலத்தை குறித்து கூறினார்.
தேவன் அவரைப் பின்பற்றுகிற யாவருக்கும் சமாதானத்தை தரவிரும்புகிறார்.
ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்வு வாழ்வது எப்படி?
லூக்கா8:12, வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்: அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.
லூக்கா8:13, கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்;கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள். ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப் போகிறார்கள்.
லூக்கா8:14, முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கி;றார்கள். கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள்.
லூக்கா8:15, நல்ல நிலத்தில் விதைக்கப்பட்;டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன் கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள்.
கிறிஸ்தவ வாழ்க்கை ஆரோக்கியமானதாக இருக்க வேண்டுமானால், கேட்கிற காரியங்களுக்குக் கீழ்ப்படிந்து அர்ப்பணிக்க வேண்டும்.
எப்படி ஆரோக்கியமாய் வாழ்வது?
லூக்கா2:52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர்; தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.
தொடர்முயற்சியாக ஜெபிக்கிற ஜெபத்தின் முக்கியத்துவம்:
தொடர்முயற்சியான ஜெபவாழ்வு நமக்கு தேவை. அதுவே தேவனுக்கும் நமக்கும் தனிப்பட்ட உறவை வளர்க்கும்.
விசுவாசத்தில் வளர, தேவனோடுள்ள உறவில் வளர, தேவனிடத்திலிருந்து ஒரு வழிக்காட்டுதலை பெற்றுக்கொள்ள ஜெபம் ரொம்ப அவசியம்.
தனி ஜெபம்:
தினமும் குறைந்தது 20 நிமிடத்தை குறித்துக்கொள்ள வேண்டும்.
ஜெபிக்க தெரியாவிட்டால் முழங்காலிலே 20 நிமிடம் நிற்க வேண்டும்.
தேவபிரசன்னத்தை அனுபவிக்க வேண்டும்.
வாய்ப்பு இருந்தால் குறிப்பிட்ட இடத்தைத் தேர்ந்தெடுத்து ஜெபிக்க வேண்டும்.
இப்படி தினமும் நேரம், இடம் தேர்வு செய்து ஜெபித்தால் நிச்சயம் நம் வாழ்வில் மாற்றம் ஏற்படும்.
யாக்கோபு4:8, தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்.
லூக்கா5:16ல். அவரோ வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். இயேசு ஜெபிப்பதற்கென்று ஒரு நேரம், இடம் வைத்திருந்தார்.
தேவசித்தத்திற்கு நேராக நம்முடைய இருதயத்தை ஒரே நேர்க்கோட்டில் ஜெபம் நிறுத்தும்.
ஆவிக்குரிய பெலனை ஜெபம் நமக்கு தரும்.
இந்த பிப்ரவரி மாதம் முழுவதும் தினமும் 20 நிமிடம் ஒரு குறிப்பிட்ட நேரம், இடத்தை தெரிந்தெடுத்து ஜெபம் செய்ய வேண்டும். இந்த தீர்மானத்தை எடுத்து தினமும் ஜெபம் செய்வோம். ஆமென்.