Youtube Link
https://www.youtube.com/watch?v=7bLGjONzONE
வேதபகுதி: எபிரெயர்10:24,25
தலைப்பு: கிறிஸ்தவ ஐக்கியத்தினுடைய அவசியம்.
தேவன் நம்மை படைத்தற்கான நோக்கம் :
அன்பு கூறவும், அன்பு கூறப்படவும். கிறிஸ்தவ உறவு எப்படியிருக்க தேவன் எதிர் பார்க்கிறாரென்றால், சபைக்கு வருகிற அனைவரும் ஒரே குடும்பமாய் மாற தேவன் எதிர்பார்க்கிறார். சபை கூடி வருதல் என்பது கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கிற ஒரு இடம். அன்புக்கும், நற்கிரியை செய்வதற்கும் சோர்ந்து போன நபர்களை உற்சாகப்படுத்தவும் வேண்டும். இதற்காக தேவன் திருச்சபையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார். சபையாக கூடிவந்திருக்கிற நாமெல்லாரும் ஐக்கியம் உள்ளவர்களாய் இருக்க தேவன் விரும்புகிறார்.
சபைக்கூடி வருதல் எப்படி ஐக்கியத்தில் வளர்வதற்கு உதவிசெய்கிறது:
1. ஆண்டவர் நம்மை உருவாக்கின நோக்கமே ஐக்கியமாக இருப்பதற்கு தான். ஆகவே ஆராதனை முடிந்தவுடன் புதிய நபர்களை விசாரித்து, ஒருவரையொருவர் வாழ்த்துங்கள். (உ.ம்: மரியாள், எலிசபெத்தை வாழ்த்தும் போது வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று.)
அப்போஸ்தலர்2:42-47, ஆதிசபையிலிருந்த ஐக்கியம் எப்படியிருந்தது என்பதைப் பார்க்கலாம். அவர்கள் நான்கு காரியங்களில் உறுதியாய் தரித்திருந்தார்கள்.
1.அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், 2.அந்நியோந்நியத்திலும், 3.அப்பம் பிட்குதலிலும், 4.ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய் தரித்திருந்தார்கள்.
அப்போஸ்தலர் உபதேசம் 7 காரியங்களை அடிப்படையாகக் கொண்டது.
• நமக்குள் இருக்கிற பாவங்கள், பொய்,துர்க்குணம்,பொல்லாப்பு,பழைய மனுஷனை களைந்து போட வேண்டும்.
ஒருவரையொருவர் பார்க்கும் போது நான் எதையெல்லாம் சரிப்படுத்த வேண்டுமென்று நீ விரும்புகிறாய் என்று கேட்க வேண்டும்.
• எதையெல்லாம் நான் செய்ய வேண்டும். கிறிஸ்துவுக்குள்ளாய் பரிசுத்தத்தில் வளருவதற்கும். எதை அணிந்துகொள்ள(குணாதிசயங்கள்) வேண்டும்.
உ.ம்: 1பேதுரு3:1-4(சாந்தம்,அமைதி இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.)
• குடும்பத்தில் எப்படியிருக்க வேண்டும்.(கணவன்,மனைவி,பிள்ளைகள்,பெற்றோர்)
• சபையில் எப்படியிருக்க வேண்டும்.
• சமுதாயத்தில் எப்படியிருக்க வேண்டும்.
• அதிகாரத்திலிருப்பவர்களுக்கு எப்படியிருக்க வேண்டும்.
• ஆவிக்குரிய யுத்தம் வரும்போது எப்படி செயல்பட வேண்டும்.
என்பதைப்பற்றியெல்லாம் ஆதிதிருசபையில் சபைகூடி வரும்போதெல்லாம் பேசினார்கள்.
நீங்களும் ஒருவரையொருவர் பார்க்கும் போது இவைகளைப்பற்றிப் பேசுங்கள்.
ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த வேண்டும்.(கலாத்தியர்6:2)
ஒருவரையொருவர் பலப்படுத்துவதற்கும், ஒருவருக்காக ஒருவர் விசாரித்து ஜெபிக்க வேண்டும்.
எனக்காக ஜெபிக்க சபை இருக்கிறது என்ற ஐக்கியம் சபைக்குள் உருவாக வேண்டும்.
ரோமர்12:15 சபைக்கு வருகிற நாம் சிறுகுழுக்களோடு இணைந்து செயல்பட வேண்டும்.
1தெசலோனிக்கேயர்5:11 தேற்றுவதற்கும், பக்திவிருத்தி உண்டாவதற்கும் இந்த ஐக்கியத்தை பயன்படுத்த வேண்டும்.
எபேசியர்5:18-21. ஆவிக்குரிய ஐக்கியம் என்பது கிறிஸ்துவை மையமாக வைத்திருக்க வேண்டும். ஆதித்திருச்சபையில் ஒருவரையொருவர் போதித்து, புத்திசொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
இந்த வாரம் செய்ய வேண்டியவை:
இதுவரை பழக்கமில்லாத(தெரிந்தவர் ஆனால் அதிக பழக்கமில்லாதவர்) ஒருநபரை வீட்டிற்கு அழைத்து அவர்களோடு ஐக்கியத்தை வளர்க்க முயற்சி செய்யுங்கள்.
நம்மை பற்றி மற்றவர்களிடம் கேட்டு குறைகள் இருக்கும் பட்சத்தில் அதை சரிசெய்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான ஐக்கியத்தை வளர்த்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆமென்.