Youtube Link
https://www.youtube.com/watch?v=APNSHRE8q7k
வேதப்பகுதி : நீதிமொழிகள் 29:25
மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும் கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
மனிதர்கள் நம்மைக் குறித்து என்ன நினைக்கிறார்களோ என்று நாம் யோசித்தால் அது நம்மை செயல்பட முடியாமல் தடுக்கும். கர்த்தரை நம்பினால் மட்டுமே நம்மால் செயல்பட முடியும்.
• எ.கா 1 : ரெகொபெயாம். (1 இராஜாக்கள்12:4,10,11) அவனுக்கு வாலிபர்கள் கொடுத்த ஆலோசனை மனுஷருக்கு பயப்படும் பயத்தை உருவாக்கியது. முதியவர்கள் நம்மை கட்டுபாடு செய்து விடுவார்களோ என்ற பயம் ரெகொபெயாமுக்கு ஏற்பட்டது. அது தேசத்தையே இரண்டாக பிரித்தது. இந்த பயம் அவனையும் அவன் சந்ததியையும் கெட்டுப்போக செய்தது. இந்த பயம் நமக்குள் இருக்கக் கூடாது. நம்மைப் பற்றிய புரிதல் நமக்கு வேண்டும். அதற்கு முதலில் தேவனைப் பற்றிய புரிதல் வேண்டும்.
• எ.கா 2 : சவுல் (அனுபவசாலியான ராஜா)
1 சாமுவேல்18:7,8,9ல் சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்ற வார்த்தையைக் கேட்டவுடன் சவுல் அந்நாள் முதற்கொண்டு தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான். மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின் மேல் இறங்கிற்று. நாம் மற்றவர்களை கசப்போடு பார்த்தால் பொல்லாத ஆவி நமக்குள் வந்து விடும். தாவீது ஒரு முறை கூட சவுலுக்கு விரோதமாய் யோசித்தது இல்லை. குறைத்து மதிப்பிட்டதும் இல்லை. ஆனால் சவுலோ, தான் மரிக்கும் வரைக்கும் தாவீதை எதிரியாகவே பார்த்தான். இது தான் மனுஷருக்கு பயப்படும் பயம்.
ஆரம்ப காலத்தில் சவுல் எப்படி இருந்தான்?
1 சாமுவேல் 10:27 ல், கர்த்தர் தன்னை அழைத்திருக்கிறார் என்ற புரிதல் சவுலுக்குள் இருந்ததால் தான் காதுகேளாதவன் போல் இருந்தான்.
என்னை அழைத்தவர், அபிஷேகித்தவர், என்னை நடத்துகிறவர் தேவன் என்ற தெளிவு இருக்க வேண்டும். மற்றவர்களின் தேவையில்லாத வார்த்தைகளின் மீது நம்பிக்கை வைத்தால் அது நம்மை பயத்திற்குள் தள்ளும்.
கர்த்தரை நம்புகிற நம்பிக்கை:
நம்பிக்கை என்பது, ஆண்டவரே நான் உதவியற்ற நபர் உம்மை நம்பி வருகிறேன் எனக்கு உதவிடும் என்பதாகும்.
1. தேவனுடைய வார்த்தையை நம்ப வேண்டும்.
2. தேவனால் எல்லாம் செய்ய முடியும் என அவருடைய செயலை நம்ப வேண்டும். ( அவர் சொல்லும் காரியம் நமக்கு நம்புவதை போல் இல்லாவிட்டாலும், சொல்லும் அவரை நம்ப வேண்டும்.)
3. அவருடைய பெலத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
இந்த வருடத்தின் இறுதியில் வந்திருக்கும் நாம் அவர்(கர்த்தர்) மேல் நம்பிக்கை வைக்க வேண்டும்.
நீதிமொழிகள் 3:5,6,7ல் உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே: கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.
தேவன் வைத்திருக்கும் காரியம் (திட்டம்) நம்முடைய சிந்தைக்கும் புத்திக்கும் எட்டாதது. கேள்விக் கேட்காமல் கீழ்படிவதே நம்பிக்கை ஆகும். 1 கொரிந்தியர் 13 ல், அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். நாம் அவரை நம்ப வேண்டுமானால் நம்மை ஞானியென்று நினைக்கக்கூடாது. எந்த காரியத்தையும் தேவன் ஒன்று போல் செய்வதில்லை. அவர் புதிய காரியங்களை செய்பவர். மனுஷருக்கு பயப்படும் பயத்தை நாம் அகற்ற அவரிடம்(கர்த்தரிடம்) கேட்க வேண்டும். அவரை சார்ந்து கொள்ள அவர் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆமென்.