Youtube Link
https://www.youtube.com/watch?v=hshkOVGY7-Y
வேதபகுதி: சங்கீதம் 25:1-22, தாவீதினால் ஏறெடுக்கப்பட்ட ஜெபசங்கீதம்.
சங்கீதம்25:4, இந்த வசனம் தான் இந்த அதிகாரத்தின் இருதய வசனமாக கூறப்படுகிறது. தேவனை அறிகிற அறிவில் வளர வேண்டும் என்று ஏறெடுக்கிற ஜெபம்.
அவருடைய வழிகளை தெரிவிக்கவும், அவருடைய பாதைகளை போதிக்கவும் தாவீது ஜெபம் பண்ணுகிறார்.
1சாமுவேல்30:8, அந்த தண்டை பின்தொடர வேண்டுமோ? என்று தாவீது தேவனிடத்தில் கேட்டு முடிவுகளை எடுத்தான்.
1. உம்முடைய வழிகளை தெரிவியும்.
என்னைக் குறித்து நீர் என்ன திட்டம் வைத்திருக்கிறீர் என்று அவரிடத்தில் கேட்க வேண்டும். மனுக்குலம் எத்தனை கோடியாய் பெருகப்போகிறதோ அத்தனைக்கும் தேவையான எல்லாவற்றையும் உருவாக்கின பின்பு தான் மனுக்குலத்தை உருவாக்கினார். எனவே நாம் தாயின் கருவில் உருவாகும் முன்னே நமக்கு தேவையான எல்லாவற்றையும் அவர் உருவாக்கி விட்டார். எனவே நமக்காக தேவன் உருவாக்கினவைகளை அடையாளம் கண்டுகொள்ள நாம் தேவனிடத்தில் கேட்க வேண்டும்.
சங்கீதம்25:4ஐ, மனப்பாடம் செய்து தினமும் 10 முறை காலை இரவு அறிக்கை செய்து ஜெபம் செய்ய வேண்டும். ஜெபம் செய்யும்போது தேவன் அவருடைய வழியை நமக்குத் தெரிவிப்பார். இன்றைக்கு அநேக தகவல்கள் நம்மை குழப்பத்திற்கு நேராய் நடத்துகிறது எனவே தேவனிடத்தில் வெளிப்பாட்டிற்காக ஜெபிக்க வேண்டும். (ஆதி12:1,2,3.)
ஆதி15:3,4. ஆபிரகாம் பல தகவல்களை கேட்டு; வீட்டில் பிறந்த பிள்ளையாகிய எலியேசரை சுதந்தரவாளியாய் எண்ணினான். ஆனால் தேவன் ஆபிரகாமிடம் அவருடைய சித்தத்தின் வெளிப்பாட்டை தெளிவாய் கூறினார்(ஆதி15:4). எனவே நாமும் நமக்கான வெளிப்பாட்டை தர தேவனிடத்தில் கேட்க வேண்டும்.
மரியாள் ஜெபம் செய்யும் போது –தேவதூதன் வந்து வெளிப்பாட்டை கொடுத்தான். மரியாளால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை காரணம் சிந்தனையில் புரிந்து கொள்ள முடியாத வகையில் இருந்தது. எனவே மீண்டும் இது எப்படி ஆகும் என்று கேட்டு, வெளிப்பாட்டை பெற்றுக்கொண்டாள். எனவே நாமும் அவருடைய வழிகளை தெரிவிக்க அவரிடத்தில் கேட்க வேண்டும்.
2. உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.
ஆதி15:6, ஆபிரகாம் தேவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு அப்படியே கீழ்படிந்தான்(விசுவாசித்தான்).
ஐசுவரியவான்: ஐசுவரியவானிடம் உனக்கு உண்டானதை விற்று தரித்திரருக்கு கொடு என்று இயேசு கூறினார். அவன் கீழ்படியவில்லை.
பவுல்: பவுல்(அப்9:6) நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டான்(அப்9:15) தேவன் பவுலைக் குறித்ததான வெளிப்பாட்டை கூறினார். எனவே நான் என்ன செய்ய வேண்டும் என நம்முடைய வாழ்வின் பாதையை நாம் அவரிடத்தில் கேட்க வேண்டும்.
இன்றைக்கு நான் என்ன செய்ய சித்தமாயிருக்கிறீர் என்று கேட்க வேண்டும். இதை கேட்டு நாம் சரியாய் செயல்பட்டால் நம்மைப் போல் மகிழ்ச்சியாய் வாழ்பவர் ஒருவருமில்லை, எனவே எந்தக்காரியமானாலும், கர்த்தாவே உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும். உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும் என ஜெபிக்க வேண்டும்.
ஆமென்.