Youtube Link
https://www.youtube.com/watch?v=xx4iccsDjbw
சங்கீதம்29: 3லிருந்து9வசனங்கள் கர்த்தருடைய சத்தத்தின் மகிமையைப்பற்றி சொல்லப்படுகிறது.
சத்தங்கள் நம் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில சத்தங்கள் நம் மனதிலும் சிந்தனையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். சில சத்தங்கள் பயத்தை ஏற்படுத்தும், நிம்மதியைக் கெடுக்கும். சில சத்தங்கள் நம்மை அமைதிப்படுத்தும்.
தேவனுடைய சத்தம் வல்லமையுள்ளது.(மரித்தவரையும் உயிரோடு எழுப்பக்கூடிய சத்தம் தேவனுடையது)
எ.கா:லாசரு – தேவனுடைய சத்தம் அவனை உயிரோடு எழுப்பியது.
நூற்றுக்கு அதிபதி – ஒரு வார்த்தை சொல்லும் என இயேசுவிடம் கேட்டான்.
சாராள் கர்ப்பந்தரித்தல் - இல்லாதவைகளை உருவாக்கும்.
உபாகமம்31:1,2 (வானங்களே, …………. கேட்பாயாக.) மழையானது இளம்பயிரின் மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும், பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும்.
ஏசாயா55:11 அப்படியே என் ……………. காரியமாகும்படி வாய்க்கும்.(தேவன் கூறிய வார்த்தை நிறைவேறும்)
வெளி2,3 ம் அதிகாரங்களில் ஆவியானவர் சபைகளுக்கு சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன் என சொல்லுகிறார். தேவன் சொல்லும் அனைத்து காரியங்களையும் முழுமையாக கேட்க வேண்டும். குறிப்பாக தேவனுடைய வார்த்தையை முழுமையாக செவிக் கொடுத்து கேட்க வேண்டும்.
வரும் நாட்களில் மத்தேயு25,26,27,28 அதிகாரங்களை தினமும் ஒரு அதிகாரம் வாசித்து , அதில் எந்த வார்த்தை, எந்த சொற்றொடர், உங்களைத் தொடுகிறதோ அந்த வார்த்தையை தியானியுங்கள். அந்த வார்த்தையை ஜெபமாக மாற்றி , அமைதியாக தேவ சமூகத்தில் காத்திருங்கள். அந்த வசனம் உங்கள் வாழ்க்கையை மாற்றும்.
நம்முடைய தேவன் சர்வவல்லமையுள்ளவர். நம்முடைய தேவன் பொய் சொல்லுகிறவர் அல்ல, அவர் மனம்மாற மனுபுத்திரனும் அல்ல.
சங்கீதம்29:3,4.மாற்கு 4:36-41. தேவன் அதட்டியதும் கடல் அலைகள் அமைதியானது. (கர்த்தரின் சத்தம் தண்ணீர்;களின் மேல் தொனிக்கிறது. மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்.)
நம்முடைய வாழ்விலும் கடினமாக இருக்கும் சூழ்நிலைகளையும் கர்த்தருடைய சத்தம் மாற்றும்.
தாவீது பல கடினமான சூழ்நிலைகளை கடந்து வந்தாலும் கர்த்தருடைய சத்தத்தைக் கேட்;டு நடந்தார்.
தேவனுடைய வார்த்தையை கேட்க காத்திருக்க வேண்டும். சங்கீதம்29:5. கேதுரு மரத்தை முறிக்கும். நம்முடைய வாழ்க்கையிலும் ஸ்தம்பித்து நிற்கும் காரியங்களையும் கர்த்தருடைய சத்தம் முறிக்கும்.
சங்கீதம்29:6 கர்த்தருடைய சத்தம் நம்மை சந்தோஷத்தினால் துள்ளப்பண்ணும்.(கன்றுக்குட்டி தாயைப் பார்த்து துள்ளுவதுபோல்.)
கர்த்தருடைய சத்தம் நம்முடைய வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு நாளும் தேவசத்தத்தை கேட்க நம்மை அர்ப்பணிப்போம். வேதத்தை வாசித்து அதன் மூலம் எங்களோடு பேசும் என ஜெபிப்போம். ஆமென்.