YouTube link Below:
யோவான் 15:1-7
7ம் வசனம் -
நீங்கள் என்னிலும்
என் வார்த்தை உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டு கொள்வது எதுவோ அது உங்களுக்கு செய்யப்படும்.
நாம் எதை கேட்கிறோமோ அதை நிறைவேற்றுவார் ஆனால் இந்த வசனத்தின் முதற் பகுதியில் நீங்கள் என்னிலும் என் வார்த்தை உங்களிலும் என்று சொல்லபடுகிற இந்த வார்த்தையை நிறைவேற்றும் போது நாம் எதை கேட்கிறோமோ அதை பெற்று கொள்வோம்.
நிலைத்திருப்பது என்றால் என்ன?
• தேவனுக்கு முன்பாக திறந்த மனதோடு தேவனிடத்தில் அறிக்கை பண்ணுவது. எண்ணங்கள், சிந்தனைகள், உணர்வுகள் இதை எல்லாவற்றையும் தேவனுக்கு தெரியப்படுத்துவது.
• அவரோடு இருக்கிற ஐக்கியத்தில் வளர்வது.
• எப்போதும் தேவ பிரசன்னத்தில் இருப்பது.
ஜெபம்
அன்பின் பிதாவே நாங்கள் உம்மிலேயும் உம்முடைய வார்த்தையிலும் நிலைத்திருக்க கிருபை தாரும்.
- தேவனோடு இருக்கிற உறவில் ஒரு படி முன்னேற வேண்டும். இந்த மாதம் முழுவதும் இதையே வாஞ்சியுங்கள், இது தான் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருத்தல்.
தேடுதல், சித்தத்தை நாடுதல், உபதேசத்தை பின்பற்றுதல், அவரின் பெலனை சார்ந்து கொள்ளுதல்.
இது நான்கும் தான் கிறிஸ்துவில் நிலைத்திருப்பதின் அர்த்தம்.
• என்னைக் குறித்தும், என் வாழ்க்கையைக் குறித்தும் தேவ சித்தத்தின் படி நடத்திச் செல்ல தேவனிடத்தில் ஜெபித்தால் தேவன் நம்மை உயித்தெழுந்த மகிமையான அனுபவத்தில் நடத்துவார்.
• அவர் என்ன சொல்லுகிறாரோ அதை செய்யும் போது எல்லாவற்றையும் தேவன் தருவார்.
• உம்முடைய பெலனைச் சார்ந்து கொள்கிறேன். அவரைச் சார்ந்து கொள்வது தான் நம்முடைய பெலன். (உதாரணம் - தாவீது)
1. நாம் தேவனுடைய வார்த்தையால் மூழ்க வேண்டும்.
2. தேவனுடைய வார்த்தையை தியானிக்க வேண்டும்.
3. நம்முடைய சிந்தனையில், வார்த்தை கிரியை செய்வதற்கு இடம் கொடுக்க வேண்டும்.