Youtube Link
https://www.youtube.com/watch?v=ak63zT-vei0
வேதபகுதி: லூக்கா11:1-10
தலைப்பு: ஜெபிப்பதற்கான ஒரு அமைப்பை (அ) ஜெபமுறையை இயேசு சொல்லி தருகிறார்.
பரமண்டல ஜெபத்தில் இயேசு ஆறு காரியங்களை நமக்குக் கற்றுக்கொடுக்கிறார்.
1. உறவைக்குறித்து சொல்லிக்கொடுக்கிறார்.
2. பயபக்தியைக் குறித்து சொல்லிக்கொடுக்கிறார்.
3. ஆளுகையைக் குறித்து சொல்லிக்கொடுக்கிறார்.
4. தேவனை எப்படி சார்ந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து சொல்லிக்கொடுக்கிறார்.
5. பிறரை மன்னிக்க வேண்டும் என்பதைக் குறித்து சொல்லிக்கொடுக்கிறார்.
6. தேவனின் பாதுகாப்பு நமக்கு வேண்டும் என்பதைக் குறித்து சொல்லிக்கொடுக்கிறார்.
இந்த ஆறு காரியங்களும் நம் வாழ்க்கையின் அனுபவமாக மாற வேண்டும்.
ஜெபம் எப்படி ஆரம்பிக்க வேண்டுமென்றால்,
அப்பா-பிள்ளை என்ற உறவின் அடிப்படையில் ஆரம்பிக்க வேண்டும். நாம் தேவனோடுள்ள உறவில் வளராமல் இரவெல்லாம் முழங்காலில் நின்று ஜெபிப்பதால் பிரயோஜனம் ஒன்றுமில்லை.
லூக்கா15:11-32ல், இளையகுமாரன் தன் தகப்பனின் அன்பை நன்கு புரிந்திருந்ததால், தகப்பனின் அன்பு இளையகுமாரனை புத்திதெளிய வைத்து மாற்றத்திற்குள் நடத்தியது. (தகப்பனிடத்திற்கு வரும்படி வைத்தது)
தேவன் நம்மை எப்படி நேசிக்கிறாரென்றால்:
1. நீ என்னுடையவன். (நாம் சர்வவல்லமைப் படைத்த தேவனுடைய பிள்ளைகள்) இயற்கையாகவே தேவன் நமக்குக் கொடுத்த அடையாளம். நான் அவரால் படைக்கப்பட்டவன், எனக்குள் இருக்கும் ஜீவன் அவருடையது, எனக்காக மரித்து எனக்காக உயிர்த்திருக்கிறார் என்ற நம்பிக்கை வேண்டும்.
2. தேவன் என்னை நேசிக்கிறார்.
(நாம் எப்படியிருந்தாலும். மற்றவர்கள் நம்மை வெறுத்தாலும் தேவன் நம்மை நேசிக்கிறார்.)
லூக்கா15:20ல், தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, கழுத்தைக் கட்டிக்கொண்டு, முத்தஞ் செய்தான். இது தான் நம்முடைய தகப்பனாகிய தேவனின் அன்பு.
3. தேவன் நம்மை ஒழுங்குப்படுத்துகிறார்.
சிட்சை என்பது ஒழுங்குபடுத்துதல். தேவன் நம் சிந்தையை ஒழுங்குப்படுத்துகிறார். மத்தேயு7:11ல், தேவன் நம்மேல் வைத்திருக்கும் அன்பை சொல்லுகிறார். சங்கீதம்32:8ல், நான் உனக்குப் போதித்து……… உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
நம் தேவனின் அன்பு நிபந்தனையற்றது. எல்லாவற்றிற்கும் மேலாய் தேவன் நம்மை தேடி வந்தார். நாம் நம்மை தேவசித்தத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டும்.
ஜெபிப்பதற்கு முன்பு தேவனோடிருக்கிற உறவு மிக முக்கியம். தேவனோடுள்ள உறவு நன்றாக இருந்தால் தவறு செய்யும் மனநிலை இருக்கும் போது கூட நாம் தவறு செய்ய மாட்டோம். ஏற்ற நேரத்தில் எனக்கு தேவையானதை என் பரலோக தேவன் தருவார் என நூறு சதவீதம் தேவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஆமென்.