Youtube Link:
https://www.youtube.com/watch?v=z4EonVWcjXs
தியான பகுதி - யோவான் 15:7, ரோமர் 8:5-17
• பஸ்கா பண்டிகையில் இருந்து ஐம்பதாவது நாள் தான் பெந்தெகோஸ்தே பண்டிகை.
• பல்வேறு நாடுகளில் இருந்து யூதர்கள் வந்து இந்த பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
• இந்த நாளில் பரிசுத்த ஆவியானவர் ஊற்றப்பட்டபோது அங்கு இருக்ககூடிய ஜனங்கள் வேறு பாஷைகளை பேசினார்கள்.
ரோமர் 8-ம் ஆதிகாரம்
ஒரு விசுவாசி எப்படி வெற்றிகரமாக வாழ முடியும் என்றும் இரகசியத்தை சொல்லுகிற வசனம் தான் இது என்று சொல்லுகிறார்கள்.
• ஏதேன் தோட்டத்தில் உள்ள ஜீவ விருட்சத்தின் கனியைப் போல இருப்பது தான் இந்த 8ம் அதிகாரம் என்று சொல்லுகிறார்கள்.
• மாம்சத்தை எப்படி ஜெயிப்பது என்பதை பற்றி பவுல் இங்கு எழுதுகிறார்.
• எப்போது இரட்சிக்கபடுகிறோமோ அப்போது நமக்குள்ளே ஆவியானவர் ஒரு புதிய வாழ்க்கை வாழ நம்மை நிரப்புகிறார்.
• என்றைக்கு மனதளவில் கிறிஸ்துவிற்கு இடம் கொடுக்கிறோமோ அப்போது ஆவியானவர் நமக்குள் வாசம் பண்ணுகிறார். (ரோமர் 8:15)
• இன்றைக்கு கிறிஸ்துவிற்குள் இருப்பவர்களுக்கு சந்தேகம் இருக்கிறது ஆவியானவர் எனக்குள் இருக்கிறாரா?
என்றைக்கு இருதயத்தில் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டோமோ அப்போதே நமக்குள் ஆவியானவர் தங்கி விடுகிறார்.
1. பயத்தை அகற்றுகிறார்.
உதாரணம் - பேதுரு
ஆவியின் நிறைவை பெறாத வரைக்கும் அவனுடைய வாழ்க்கை வித்தியாசமாக இருந்தது (அவன் பயந்தான்)
ஆவியானவரின் நிறைவைப் பெற்ற போது பயப்படாமல் தேவனுக்காக சாட்சியாக நிற்கிறார்.
ஆவியானவர் நமக்குள் இருக்கும் போது பயத்தை நீக்குகிறார், ஒரு புது ஜீவனைத் தருகிறார்.
ரோமர் 8:6 மாம்ச சிந்தை மரணம் ஆவியின் சிந்தை ஜீவனும் சமாதானமுமாம்.
ரோமர் 8:9-ம் வசனம் கர்தருடைய ஆவியானவர் நமக்குள் வாசம் பண்ணுவதற்கு இடம் கொடுத்தால் ஆவிகுட்பட்டவர்களாய் இருப்போம்.
ரோமர் 8:11 – உயிரோடு இருக்கும் போது உயிர்பிக்கும் அனுபவத்தை ஆவியானவர் கொடுப்பார்.
இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகிற ஆவியானவரால் நிரப்படுவதற்கு இடம் அளிக்கிறோமா?
• ஓவ்வொரு நாளும் ஆவியானவரால் நிரப்படுகிற அனுபவம் நமக்குள் இருக்க வேண்டும்.
உதாரணம் - அப்போஸ்தலர்கள் இந்த அனுபவத்தை பெற்றிருந்தார்கள்.
• நமக்குள்ளே பரிசுத்த ஆவியானவர் இருப்பாரானால் நாம் எந்த இடத்தில் இருந்தாலும் அசுத்த ஆவி நம்மை பார்த்து அது பயப்பட வேண்டுமே தவிர நாம் பயப்படக் கூடாது.
• பரிசுத்த ஆவியானவர்.நம் கூட இல்லை நமக்குள் இருக்கிறார்.
2. தேவனுடைய ஆவியானவராலே நிரப்பட்டிருப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்.
• ஆவியானவரே என்னை நிரப்பும் என்கிற முதல் அனுபவத்தை பெறுங்கள்.
• தினந்தோறும் ஆவிக்குரியக் காரியங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்;;;;. பிரசன்னம் கேட்டு அதை பெற்றுக் கொள்கிற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது தான் உயிரோட்டமான கிறிஸ்தவ வாழ்க்கையாக இருக்கும்.
• நன்றி செலுத்த பழகுங்கள்.
• நல்ல கிறிஸ்தவ பாடல்கள், செய்திகள் கேளுங்கள்.
• சில விசுவாசிகளோடு சேர்ந்து ஜெபிக்க, தேவனை பற்றி பேசப் பழகுங்கள்.
3. ஆவியை அவித்து போடாதிருங்கள், துக்கப்படுத்தாதிருங்கள். (1தெச 5:19)
நாம் அவருக்கு பிரியமில்லாமல் நடக்கும் போது நாம் அவரை துக்கப்படுத்துகிறோம்.
உதாரணம் - சிம்சோன், சவுல்
தன்னுடைய சொந்தக் காரியத்திற்கு இடம் கொடுத்து விட்டாதால் ஆவியானவர் அவர்களை விட்டு விலகி விட்டார்.
(தேவனுடைய வார்த்தை நமக்கு நேராய் வரும் போது பிடிக்கிறதோ இல்லையோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லையென்றால் ஆவியானவர் விலகி விடுவார்.)
1கொரி 9:27 – மாம்சத்தில் சுய கட்டுபாடு இருக்க வேண்டும்.
1. அதிகமாக சாப்பிடுவது
2. அதிக தூக்கம்
3. சோம்பல்
• மாம்சத்தை கட்டுபாட்டிற்குள் வைக்க பழகுங்கள். நான் ஆகாதவனாய் போகாதபடி சரீரத்தை கட்டுப்படுத்துங்கள்.
• ஆவியானவர் உதவி செய்வார். ஆவியானவர் இருந்தால் இந்த ஒழுங்கு நமக்குள் இருக்கும்.
• கேளுங்கள் ஆவியானவரே நீர் என்னை ஆளுகை செய்து என்னை நிரப்பும்.
• ஆவியானவர் நிறைவிற்கு அடையாளமாக இன்றைக்கு நம்மிடத்தில் கைபிரதி இருக்கிறது இதை ஒரு ஐந்து நபருக்கு கொடுங்கள்.