புனித வெள்ளி ஆராதனை
இயேசு சொன்ன கடைசி 7 வார்த்தைகள்
சிலுவையில் இயேசு பேசின கடைசி ஏழு வார்த்தைகள்: பொன்மொழிகள்
பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.
3 காரியங்களை தியானிப்போம்.
பிதாவே - தன் வார்த்தையை பிதாவோடு தொடங்குகிறார்.
(தேவனோடு உள்ள உறவு) ஏராளமான உறவுகள் இருந்தாலும்,இறுதிவரை வரும் உறவு தேவன் மட்டுமே.
இவர்களை மன்னியும் - நம்மை நாமே முதலாவது மன்னிக்க வேண்டும். மற்றவர்களையும் மன்னிக்க வேண்டும்.(1 யோவான் 1:7)
தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்:பரிந்து பேசிஜெபிக்கிறார். நாமும் பிறருக்காக பரிந்து பேசி ஜெபிக்க வேண்டும்.
(மத்தேயு 5:44)
இரண்டாம் வார்த்தை:இன்றைக்கு நீஎன்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்.
லூக்கா 23:43
எந்த விஷயம் திருடனை மனமாற்றியது என்று பார்ப்போம். அவன் எப்படி தேவனை அறிந்து கொண்டான். (லூக்கா 23:34)
தேவனை பற்றிய புரிதல் நாம் தேவனை அறிகிற அறிவில் தினமும் வளரவேண்டும்.
தினமும் ஜெபம் மற்றும் வேதம் வாசித்தல்.
லூக்கா 23:42:நம்முடைய சிந்தை பரலோகத்தின் சிந்தையால் நிரப்பபட வேண்டும்.
தேவனை பற்றி யோசித்தல் (இயேசுவை கவனித்து பார்க்கும் போது அவன் வாழ்வில் மாற்றம் உண்டானது.)
(நீதி 14:22,16:6)
மூன்றாம் வார்த்தை:யோவான்19:26 (ஸ்திரீயே,அதோ,உன் மகன் என்றார்.)
பொறுப்புள்ள நபராக இருந்தார்
பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவது மிக முக்கியமான பொறுப்பு.
தன் தாயை, தன் சீஷன் ஏற்று கொண்டு பாதுகாக்க வேண்டும். என்பதில் கவனமுள்ள நபராக இருந்தார்.
நம்முடைய பொறுப்பு, கடமையின் அடிப்படையில் செய்யாமல், உறவின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
உறவுகள் கட்டபட, மரியாதை கொடுக்க வேண்டும். (மரியதை)
(பிலி 2:3)
நான்காம் வார்த்தை மத்தேயு 27:46
என் தேவனே! என் தேவனே!ஏன் என்னை கைவிட்டீர்.
சங் 22;:1, தீர்க்கதரிசனம்; நிறைவேறும் படி இப்படி சொன்னார்.
பாவநிவாரண பலி: 2கொரி 5:21
கடந்த கால, நிகழ் கால, எதிர் கால பாவங்கள் இயேசுவின் மேல் சுமத்தப்பட்டது. பிதாவின் திருமுகம் மறைக்கப்பட்டது.
சர்வலோகத்தின் பாவத்தை சுமந்துதீர்க்கும்படி வந்த தேவ ஆட்டுக்குட்டி.
ஐந்தாம் வார்த்தை:யோவான் 19:28 (தாகமாயிருக்கிறேன் என்றார்)
நித்திய வாழ்க்கைக்கான தாகம். லூக்கா 15:1-32, வசனங்களை கேட்கும்படி அநேகர் அவரிடத்தில் வந்தார்கள்.
அவர் சீஷர்களை அனுப்பும்போது இருந்த தாகம் (ஆத்துமாக்களை குறித்த தாகம்) இன்றும் இருந்து கொண்டேயிருக்கிறது. இதை நிறைவேற்ற நாமும் செயல்படுவோம்.
ஆறாம் வார்த்தை: முடிந்தது.யோவான்19:30
பிதா நியமித்த காரியங்களை முடித்தேன்.
ஆவிக்குரிய கண்கள் (ஆதி 21:19) (ஆகாளின் கண்கள்)
ஆண்டவர் வைத்திருக்கிற எல்லா ஆசீர்வாதமும் நம்மை சுற்றிதான் இருக்கிறது.
எப்படி பெற்றுகொள்வது. விசுவாசம் நமக்கு இருந்தால் பெற்றுகொள்ள முடியும்.
யோவான் 17:4 (இயேசு பிதாவின் சித்தத்தை செய்தார்.
அவர் நம் மீது வைத்திருக்கிற சித்தத்தை செய்ய வேண்டும்.
ஏழாம்வார்த்தை: லூக்கா 23:46. பிதாவே, உம்முடைய கைகளில் என்ஆவியை ஒப்புவிக்கிறேன்.
• வலி நிறைந்த சூழ்நிலையில், ஜெபிக்க கற்று கொள்ள வேண்டும்.
• தேவகரம் எவ்வளவு நன்மையானது என்பதை பார்க்கலாம்,
• மனித கரம்-சிலுவையில் அறைந்தது(இயேசுவை).
• இயேசு சரீர அளவில் பெலமுள்ளவரை,பெலவீனமாக மாற்றியது.
லூக்கா 23:46. இறப்புக்கு பிற்பாடு ஓரு வாழ்க்கை இருக்கிறது என்பதை உணர்த்துகிறது, மீண்டும் இந்த வாழ்வு அவரிடத்தில் போக போகிறது, என்ற நம்பிக்கை நமக்கு வேண்டும்.
Part 1 | இயேசு சொன்ன கடைசி 7 வார்த்தைகள் | Good Friday Service by Rev.B.Samuel | 29-Mar-2024
Part 2 | இயேசு சொன்ன கடைசி 7 வார்த்தைகள் | Good Friday Service by Rev.B.Samuel | 29-Mar-2024
Part 3 | இயேசு சொன்ன கடைசி 7 வார்த்தைகள் | Good Friday Service by Rev.B.Samuel | 29-Mar-2024