Youtube Link
https://www.youtube.com/watch?v=EFFFaCpOsz4
வேதபகுதி: மல்கியா 4:1-6
மல்கியா 4:2, ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள் மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
எப்பொழுதும் ஒரு வாக்குத்தத்த வசனத்தை வாசிக்கும்போது, அதன் பின்னணியை புரிந்து கொள்ள வேண்டும். பாபிலோனிலிருந்து எருசலேமிற்கு வந்த இஸ்ரவேலர்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் குளிராய் இருந்தார்கள். அரைகுறை இருதயத்தோடு தேவனை தொழுதார்கள். மேலும்
• சுயதிருப்தி(பெருமையும் வந்துவிட்டது).
• அரைகுறை மனதோடு ஆராதித்தார்கள்.
• ஆசாரியர்கள் கறைபடிந்தவர்களாக மாறிபோனார்கள்.
• திருமண வாழ்க்கை தோல்வியடைந்தது.
• கர்த்தருக்குக் கொடுக்க வேண்டிய தசமபாகத்தை கொடாதிருந்தார்கள்.
இப்படிபட்ட காலத்தில் மல்கியா நியாயத்தீர்ப்பை சொல்லுகிறார்.
மல்கியா 3:1ல், ஒரு தூதனை அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். (மீட்பின் செய்தி)
கர்த்தருக்கு பயப்படுகிற பயம் என்பது:
1. தேவனுக்கு கொடுக்கும் மரியாதை.
நாம் தேவனை யாராக வைத்திருக்கிறோமோ அதற்கு ஏற்ற மரியாதை கொடுக்க வேண்டும்.
(நான் பிதாவானால் எனக்கு கொடுக்கும் கனம் எங்கே?) (மல்கியா 1:6)
2. தேவனைக் குறித்த ஒரு பிரமிப்பான ஆச்சரியமான உணர்வு.
அவருடைய நாமத்தை சொல்ல சொல்ல நமக்கு ஆச்சரியமாய் இருக்கும். அவர் செய்த நன்மை(செயல்களை) நினைக்கும் போது பிரமிக்காமல் இருக்க முடியாது.
3. முழு அர்ப்பணிப்பு.
இந்த 3 காரியங்கள் தான் கர்த்;தருக்கு பயப்படும் பயம்.
மல்கியா 4:2, அவர் நாமத்திற்கு பயந்திருக்கிறவர்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்.
நீதியின் சூரியன் என்பது, புதிய நாள் உண்டாகும். இருள் நீங்கும், புதிய வெளிச்சம் உண்டாகும், சுகம் உண்டாகும், தேவன் அவருடைய வல்லமையை நம்மில் செயல்படுத்துவது.
லூக்கா 1:78,79. அந்தகாரத்தில் இருப்பவர்களுக்கு வெளிச்சம் உண்டாகும். தேவன் நம்முடைய கால்களை சமாதானத்தின் வழியிலே நடத்துவார். அவர் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும். எண்ணாகமம் 6:24,25,26. அவருடைய முக பிரகாசம் நமக்கு சமாதானம், கிருபை, மன்னிப்பு, நம்பிக்கை இவைகளைத் தரும்.எனவே பயத்தில் வாழாதிருங்கள், எதிர்பார்ப்போடு வாழுங்கள். ஆமென்.