Youtube Link
https://www.youtube.com/watch?v=1VfjBRYpsec
வேதப்பகுதி : நியாயாதிபதிகள் 6:12,14
பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ: நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்: உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.
நம்முடைய வாழ்க்கை தேக்க நிலையில் இல்லாமல் அடுத்த கட்;ட வளர்ச்சியில் தேவன் நியமித்த பாதையில் முன்னோக்கி செல்ல தேவன் விரும்புகிறார்.
இஸ்ரவேல் ஜனங்கள் மீதியானியரின் கையில் 7 வருடம் ஒப்புக்கொடுக்கப்பட்டனர். மீதியானியர் இஸ்ரவேலர்களின் பலனை அனுபவிக்கவிடாமல் ஆசீர்வாதத்தை எடுத்துக் கொண்டு போய்விடுவார்கள். அதனால் இஸ்ரவேல் ஜனங்கள் ஸ்தம்பித்து போய்விட்டார்கள். இதனால் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை நோக்கி முறையிட்டார்கள்.
கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி, அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு செயல்படவில்லை என அவர்கள் தவறை உணர்த்துகிறார் (நியாயாதிபதிகள் 6:8-10).
நீதிமொழிகள்1:33 ல், எனக்குச் செவி கொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம் பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்;.
நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் நமக்குக் கூறிய வார்த்தைகளுக்கு, நாம் எதிலெல்லாம் கீழ்படியவில்லை என்பதை சிந்தித்து, அதை உணர்த்த நாம் அதை சரி செய்ய தேவனிடம் கேட்க வேண்டும்.
1. ஆதியாகமம்12:1-3, கர்த்தர் ஆபிரகாமை அவர் காண்பிக்கும் தேசத்துக்கு போ என்றார். கானானுக்கு போக வேண்டிய ஆபிரகாம் தேராகு சொன்னதால் ஆரானிலே தங்கி விட்டான். தேராகு மரித்த பின், ஆபிரகாம் தேவன் போக சொன்ன இடத்திற்கு நேராக சென்றான். தேராகு என்னும் வார்த்தையின் அர்த்தம் “பழையமுட்டாள்” , “அலைந்து திரிகிறவன்” . இந்த குணத்தினை நாம்அழிக்க வேண்டும். அதன் பின்பு தான் கர்த்தர்; நம்மில் கிரியை செய்வார்.
கர்த்தர் இது உன் அடையாளம் அல்ல…… . என்னைச் சார்ந்து கொள் எனக் கூறுகிறார். தேவன் விட்டுவிட சொல்லுவதை விட்டுவிட வேண்டும்.
2. நியாயதிபதிகள் 6:25,26 ல். கர்த்தர் கிதியோனிடம் 7 வயதான இரண்டாம் காளையைப் பலியிடச் சொல்லுகிறார்.
நியாயாதிபதிகள் 6:4ல், இஸ்ரவேலர்கள் மீதியானியரிடத்தில் 7 வருஷம் அடிமையாய் இருந்தனர் அந்த காலக்கட்டத்தில் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட காளை இது. நாமும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தேவன் அர்ப்பணிக்க எதை உணர்த்துகிறாரோ அதை அர்ப்பணித்து நாம் பலியிட வேண்டும். இவ்வாறு செய்யும் போது நாம் அடுத்த நிலைக்கு முன்னேற முடியும்.
நாம் ஸ்தம்பித்து இருக்கும் சூழ்நிலையில் இருந்து மாறவேண்டுமானால்:
• தேராகு சாக வேண்டும். (பழையமுட்டாள் தனத்தை, அலைந்து திரியும் தன்மையை விட்டுவிட வேண்டும்.)
• நாம் தேவனிடம் அர்ப்பணிக்க வேண்டிய காரியத்தை அர்ப்பணித்து விட்டுவிட வேண்டும்.
இந்த 2 காரியங்களையும் செய்யும் போது தேவன் நம்மை முன்னோக்கி நடத்துவார். ஆமென்.