Youtube Link
https://www.youtube.com/watch?v=hsQ0-dFfVGI
வேதப்பகுதி : நியாயாதிபதிகள் 6:12,14
பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே பேர் உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.
இஸ்ரவேல் ஜனங்கள் 450 ஆண்டுகள் எகிப்திலே அடிமையாக இருந்தார்கள். பாவம் செய்வார்கள், தேவ சமூகத்தில் முறையிடும் போது இரட்சிப்பு உண்டாகும் . மறுபடியும் பாவம் செய்து தேவ சமூகத்தை விட்டு விலகிப் போவார்கள். இவர்களை தேவன் மீதியானியர் கரங்களில் ஒப்புக்கொடுத்தார். (நியாயாதிபதிகள்6:6)ல் மீதியானியர், இஸ்ரவேல் ஜனங்களை சிறுமைப்படுத்தினார்கள். எப்படி சிறுமைப்படுத்தினார்கள் எனில், விளைச்சலின் பலனை அனுபவிக்கவிடாமல் தடுத்தனர். ஏழைகளாகவும், பலவீனமுள்ளவர்களாகவும் மாற்றினர்.
நம்மைப் பெலவீனப்படுத்துகிற சில காரியங்கள்:
• நீதிமொழிகள் 6:9-11. தூக்கம் - தூக்கத்தை விரும்பக்கூடாது, அது நம்;மை தரித்திரப்படுத்தும். இந்த வருடத்தில் அதிகமான தூக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
• நீதிமொழிகள் 1:5, பதறுதல் - பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும். பரப்பரப்பாய் இருக்கக் கூடாது, எதிலும் நிதானமாய் இருக்க வேண்டும்.
• நீதிமொழிகள் 21:17, சிற்றின்பம் - சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான். நாம் செய்கின்ற சின்ன சின்ன பாவங்கள், மதுபானம், அதிக சாப்பாடு இவைகள் நம்மை தரித்திரப்படுத்தும்.
• நீதிமொழிகள் 23:21 , போஜனப்பிரியன் - குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்.
இவைகளை நம்மைவிட்டு நாம் அகற்ற வேண்டும் இல்லாவிட்டால் இந்தக் காரியங்கள் நம்மை சிறுமைப்படுத்தி விடும்.
நியாயாதிபதிகள் 6:10ல், இஸ்ரவேலர்களின் பிரச்சனைகளுக்கான காரணத்தை தேவன் சுட்டிக்காட்டினார். நம்முடைய குறைகளை சுட்டிக்காட்ட நாம் தேவனிடம் கேட்க வேண்டும்.
கிதியோனின் பின்னணியம்:
- மனாசேயில் எளியகுடும்பம்.
- தீர்மானம் எடுக்கத் தகுதியற்ற நபர்.
- எந்தக் காரியத்தையும் துணிந்து செய்யமுடியாத மனநிலைக் கொண்டவன்.
- அடையாளத்தை தேடுபவன்
- நான் எப்படி இதை செய்வேன் என்ற தாழ்வு மனப்பான்மையுள்ளவன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் இருக்கலாம். ஆனால் தேவன் நம்மை பராக்கிரமசாலியாய்ப் பார்க்கிறார்.
இந்த வருடத்தில் தேவன் நம்மூலம் செய்யப் போகும் கிரியை ஆச்சரியமானதாய் இருக்கும்.
இந்த வருடத்தில் தேவன் எதிர்பார்ப்பது?
1. நமக்கும் தேவனுக்கும் இடையே நல்லுறவு வளரவேண்டும்.
2. நாம் அடையாளத்தைக் கேட்டால் தேவன் அடையாளத்தை தந்து உறுதிப்படுத்துவார்
3. இந்த வருடத்தில் நம்மைக் கொண்டு பெரியக் காரியத்தை செய்ய தேவன் சித்தமாய் இருக்கிறார். இதற்கு தேவையான ஆட்களை தேவன் நம்மோடு இணைப்பார்.
வழக்கத்திற்கு மாறானத் திட்டத்தை தேவன் செயல்படுத்த போகிறார். கிதியோனுக்கு பானை, தீவட்டி, எக்காளம் இவைகளை யுத்தத்திற்கு பயன்படுத்த, வழக்கத்திற்கு மாறான பொருளாய் தேவனால் கொடுக்கப்பட்டது. நியாயாதிபதிகள் 7:12, 6:16( ஜனங்களோ கடற்கரை மணலைப் போல திரளாய் இருந்தார்கள். தேவனோ கிதியோனிடம் அவர்களை ஒரே மனுஷனை முறியஅடிப்பது போல முறியஅடிப்பாய் என்றார்.)
இந்த 2025 ல், பெரிய பெரிய போராட்டங்களை நாம் சந்தித்தாலும் ஒரு மனுஷனை முறியடிப்பது போல முறியடிப்போம்.
• நம்முடைய பெலவீனத்தில் தேவனுடைய பெலன் விளங்கும்.
• கேள்வி கேளாமல் கீழ்படிய வேண்டும்.
• பயத்தை மறைத்து விசுவாசமாய் பேச வேண்டும்.
• இந்த வருடத்தில் தேவன் நம்மை உயர்த்துவார் ஆனால் நாம் தேவனை மறந்து விடக்கூடாது.
இந்த 4 காரியங்களை செய்தால் தேவன் நம் காரியத்தை வாய்க்கப் பண்ணுவார்.