Youtube link
https://www.youtube.com/watch?v=FpaMBbPp3oU
வேதபகுதி: வெளிப்படுத்தின விசேஷம் 3:14-22
மல்கியா தீர்க்கதரிசி வாழ்ந்த காலக்கட்டத்தில் இருந்த இஸ்ரவேலர்களின் ஆவிக்குரிய நிலையும், லவோதிக்கேயா சபையின் ஜனங்களின் நிலையும், இன்றைக்கான திருச்சபை ஜனங்களின் நிலையும் ஒரேமாதிரியாக தான் உள்ளது.
இந்த மூன்றுகால ஜனங்களும், வெதுவெதுப்பான ஆவிக்குரிய வாழ்க்கையை கொண்டிருந்தார்கள். (சுயதிருப்தி உள்ள வாழ்க்கை) நீதியின்மீது பசிதாகமற்ற வாழ்க்கையை ஜனங்கள் வாழ்ந்தார்கள். ஆவிக்குரிய வாழ்க்கையில் நிறைய இடங்களில் தவறான காரியங்களோடு இணைந்து வாழ பழகிக் கொண்டோம். எனவே ஆவிக்குரிய வாழ்க்கையைக் கெடுத்துப்போடும் காரியங்களில் இருந்து நாம் விலகி வாழக்கற்றுக் கொள்ள வேண்டும். ஜெபம், வேதம் இவை இரண்டும் நமக்கு தினந்தோறும் பழக்கமுள்ளவைகளாய் இருக்க வேண்டும்.
அப்போஸ்தலரின் உபதேசங்கள்:
1. பழைய மனுஷனைக் களைந்து (பாவம், கோபம், பொய் சொல்லுதல்….)
போட வேண்டும்.
2. புதிய மனுஷனை (இயேசுவை, பரிசுத்தத்தை) அணிந்துக் கொள்ள வேண்டும். தேவன் எதிர்பார்க்கும் உண்மை நமக்குள் இருக்க வேண்டும். நாம் வெதுவெதுப்பாய் இருந்தால் தேவன் நம்மை வாந்திபண்ணி போடுவேன், துரத்திவிடுவேன் என்கிறார். இவ்வுலகில் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் தேவனின் உறவை இழக்கக் கூடாது.
நம்முடைய வாழ்வின் உண்மையான நிலையை அறியாதபடிக்கு குருடனாய் இருக்கக் கூடாது.
சவுல் 39 ஆண்டுகள் தேவ உறவை இழந்துபோனான். தான் நன்றாய் இருப்பதாக நினைத்துக்கொண்டான். (நிர்பாக்கியமுள்ளவனாய் வாழ்ந்தான்.)
1கொரிந்தியர்15:19, இம்மைக்காக மாத்திரம்…..எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.
1. நான் ஏன் இயேசுவை பின்பற்றுகிறேன்?
2. நான் ஏன் கிறிஸ்தவனாக வாழ்கிறேன்? இந்த 2 கேள்விகளையும் நாம் தினமும் நம்மிடத்தில் கேட்க வேண்டும். (பூமிக்குரிய தேவைக்காக தேவனை பின்பற்றுகிறவர்களாய் இருந்தால் பரிதபிக்கப்படத்தக்கவர்களாய் இருப்போம்.) மற்றவர்களின் உயர்வு நம்மை பாதித்தால் நாம் சரியான கிறிஸ்தவர்கள் அல்ல பரிதபிக்கப்பட்டவர்களாய் இருப்போம். தேவபிரசன்னத்தை அனுபவிக்க முடியாமல் போனால் தரித்திரராய் இருப்போம்.
ஜெபம், வேதம் இதில் ஆர்வம் இல்லையெனில் தரித்திரராய் இருக்கிறோம் என அர்த்தம்.
நீதிமொழிகள் 30:15, 16 தேவனோடு நல் உறவு இருக்கும் போது திருப்தியான வாழ்க்கை இருக்கும். நம் வாழ்க்கையில் நாம் எப்படி இருக்கிறோம் என்ற புரிதல் வேண்டும். (குருட்டுத் தன்மை இருக்கக் கூடாது.)
• வெளி 3:20, (தேவனோடு ஆத்மார்த்தமான உறவில் நாம் வளரவேண்டும்.) வெதுவெதுப்பான வாழ்க்கைநிலை மாற வேண்டும். மனம்திரும்பி, அறிக்கை செய்ய வேண்டும்.(நமக்குள் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்ட தேவனிடம் கேட்க வேண்டும், அதை அறிக்கையிட்டு மனம்திரும்ப வேண்டும்.)
1. நான் ஏன் கிறிஸ்தவனாக இருக்க வேண்டும்? – ஜெபம்
2. நான் பார்வையடையும்படிக்கு என் கண்களுக்கு கலிக்கம் போடும், உணர்வுள்ள இருதயத்தை எனக்கு தாரும். எனக்கு உதவி செய்யும், நீர் என் கண்களைத் திறந்தருளும் எனக் கேட்க வேண்டும். – ஜெபம்
3. உம்மோடுள்ள உறவில் இன்னும் ஐக்கியப்பட உதவி செய்யும். எந்த நோக்கத்திற்காக படைத்தாரோ அதை நிறைவேற்ற தேவனிடம் கேட்க வேண்டும். - ஜெபம்
இந்த 3 காரியங்களை தேவனிடத்தில் கேட்க வேண்டும். அவற்றை சரிசெய்யும்போது தேவன் வெதுவெதுப்பான நிலையை நீக்கிப் போடுவார். ஆமென்.