Youtube Link
https://www.youtube.com/watch?v=m5RRMnZwBWA
வேதபகுதி: அப்போஸ்தலர்1:3,5
இயேசுகிறிஸ்து எடுத்துக்கொள்ளப்படுகிற நாற்பது நாளளவும் தொடர்ந்து சொல்லப்பட்ட செய்தியையே சொன்னார். என்ன செய்தி? தேவனுடைய இராஜ்யத்திற்கு உரியவைகளைப் பேசினார்.
ஒவ்வொரு நாளும் நாம் பெந்தெகோஸ்தே அனுபவத்தை பெற வேண்டும்.
அப்போஸ்தலர்1:14, ஒருமனப்பட்டு ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். அப்போஸ்தலர்3 (பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். அலங்கார வாசலில் பிச்சைக்கேட்டுக் கொண்டிருந்தவனை இயேசுவின் நாமத்தில் எழுந்து நடக்க வைத்தனர். சப்பாணியாய் இருந்தவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்.)
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை உற்சாகமுள்ளதாய் இருக்க வேண்டும்.
அப்போஸ்தலர் 3:7, பேதுரு, அவன் கையைப் பிடித்து தூக்கிவிட்டான் அவன் கால்களும், கரடுகளும் பெலன் கொண்டது.
நாமும் பேதுருவைப் போல மற்றவர்களுடைய வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துகிறவர்களாய் இருக்க வேண்டும். (அப்3:6) வெள்ளியும் பொன்னும் நம்மிடத்தில் இல்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் தேவனுடைய நாமத்தினால் எழுந்து நட என்று கூறுகிற விசுவாசம் நமக்குள் இருக்க வேண்டும். அப்3:16 (அப்3:12) தேவனுடைய நாமத்தை உயர்த்தினார்கள்.
நாமும் தேவனுடைய நாமத்தை உயர்த்துகிறவர்களாய் இருக்க வேண்டும்.
1. எங்களை நோக்கிப்பார் என்கிற விசுவாச வார்த்தை நமக்குள் இருக்க வேண்டும்.
2. எங்களை நோக்கிப் பார்ப்பதென்ன என்கிற தாழ்மை எண்ணம் நமக்குள் இருக்க வேண்டும்.
நம்முடைய கருத்தான ஜெபம் நம்முடைய குடும்பத்தில் மாற்றத்தை கொண்டு வரும், நமக்குள் மாற்றத்தை ஏற்படுத்தும்.
நம்மை நோக்கிப்பார்க்க நம் குடும்பத்தாரிடம் சொல்ல வேண்டும். நம் ஜெபத்தில் கருத்துள்ளவர்களாய் இருக்க வேண்டும். எங்களை நோக்கிப் பார்ப்பது என்ன என்று நாம் கேட்கும் அளவிற்கு நாம் தாழ்மை உள்ளவர்களாய் இருக்க வேண்டும். (அப்3:12) தேவனுடைய நாமத்தை உயர்த்துகிறவர்களாய் நாம் இருக்க வேண்டும். ஆமென்