Youtube Link
https://www.youtube.com/watch?v=sCLXkFxnEB4
வேதபகுதி :1பேதுரு2:9. 1பேதுரு5:5-7
1பேதுரு5:5-7, இந்த மூன்று வசனங்களும் ஒரு குறிப்பிட்ட காரியத்தை தெரியப்படுத்துவதற்காக எழுதப்பட்டவை.
ஆதிதிருசபை மக்கள் தேவனை ஆராதித்ததினால், பாடுகளுக்கும் உபத்திரவங்களுக்கும் உட்படுத்தப்பட்டார்கள். அந்த பாடுகளின் மத்தியில் எப்படி வாழ வேண்டும் என்று எழுதப்பட்டவை தான் இந்த பேதுரு நிருபங்கள்.
1பேதுரு2:13, நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர் நிமித்தம் கீழ்ப்படியுங்கள்.
1பேதுரு2:18, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். 1பேதுரு2:21, கீழ்படிதலுக்கு உதாரணமாக பேதுரு, இயேசுவையும் குறிப்பிட்டு கூறுகிறார்.
1பேதுரு3:1, மனைவிகளே உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்.
1பேதுரு5:5, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள்.
ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத்தாழ்மையை அணிந்து கொள்ளுங்கள் என்கிறார். மனத்தாழ்மை அணிந்து கொள்ளுதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
1பேதுரு5:6,7 ஏற்ற காலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
தாழ்மை என்பது:
• தேவனை நாம் சார்ந்து இருக்க வேண்டும்; என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
• எனக்கு ஆண்டவர் அவசியம்(முக்கியம்) என்ற புரிதல்(தேவன் எல்லாவற்றையும் செய்ய வல்லவர் என்ற புரிதல்)நமக்கு வேண்டும். நம்முடைய பெருமையையும் அகங்காரத்தையும் நாம் அகற்ற வேண்டும்.
• தேவன் மட்டுமே அனைத்தையும் செய்ய முடியும் என்ற எண்ணம் இருக்க வேண்டும்.
பிறருக்கு விருப்பத்தோடு வேலைசெய்தல். எந்தவொரு அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றாலும் நம்முடைய வேலையை நாம் சரியாக செய்ய வேண்டும். இந்த 3 காரியங்களும் சேர்ந்து தான் தாழ்மை.
இப்படிப்பட்ட தாழ்மையை அணிந்து கொண்டால் தான் ஒருவருக்கொருவர் கீழ்படிய முடியும்.
1பேதுரு5:7, உங்கள் கவலைகளை அவர்மேல் வைத்துவிடுங்கள்.
தாழ்மையுள்ளவர்களால்தான் அவர்களது கவலைகளை தேவன்மேல் வைக்கமுடியும். தேவசமூகத்தில் என்னால் இதை சுமக்க முடியாது இந்த கவலையை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என்று வைத்துவிட்டு தேவன் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
உதா: கற்சாடிகளில் தண்ணீர் ஊற்றுங்கள் என்றார். மேலும், அதை பரிமாறவும் கூறினார். இது எளிதான காரியம் ஆனால் நடைமுறைக்கு சாத்தியமற்ற (ஒத்துவராத) காரியம் ஆகும். காரணம்- சுத்திகரிப்பதற்காக வைக்கப்பட்ட ஜாடிகள்.
நடைமுறைக்கு சாத்தியமற்ற காரியமாய் இருந்தாலும் அவருக்கு கீழ்படிய வேண்டும்.
பலத்த கரத்திற்குள் அடங்கியிருத்தல்:
• தேவன் என் மீது கரிசணை உள்ளவராய் இருக்கிறார் என்கிற எண்ணம் உள்ளவர்களால்தான் அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருக்க முடியும்.
அவர் நம்மை உருவாக்குகிறவர் என்ற புரிதலும் நம்பிக்கையும் நமக்குள் வேண்டும்.
மனத்தாழ்மை இருந்தால்தான் தேவனுடைய அதிகாரத்திற்குள் நம்மை உட்படுத்த முடியும். பெரும்பாலும் அவருடைய பலத்தகரம் நம்மை வனாந்தரத்திற்குள்தான் நடத்தும். காரணம், நம்மை உருவாக்குவதற்கே.
தாழ்மை இருப்பவர்கள்தான் தேவனுடைய ஒத்தாசையை பெறுவதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக; கொள்வார்கள்.
• நம்முடைய கண்கள் தேவனை நோக்கிப் பார்க்க வேண்டும்.
• அவர்தான் ஒத்தாசை அனுப்புவார் என நம்முடைய இருதயத்தை அவருக்கு நேராய் நாம் ஆயத்தப்படுத்த வேண்டும்.
• நமக்கு உதவி செய்ய அவரால் மட்டுமே முடியும் என்ற எண்ணம் நமக்குள் வேண்டும். ஆமென்.