Youtube Link
https://www.youtube.com/watch?v=vx_Pgk93C1k
வேதபகுதி : லூக்கா10:38, லூக்கா11:1-4
தலைப்பு : ஜெபம் என்றால் என்ன?
சீஷரில் ஒருவன் இயேசுவை நோக்கி யோவான் தன் சீஷருக்கு ஜெபம் பண்ண போதித்தது போல, நீரும் எங்களுக்கு ஜெபம் பண்ண போதிக்க வேண்டும் என்றான்.
யோவானின் ஜெபம் :
1. பரிசுத்தம்: ஆண்டவரே நீர் எங்களை மாயையின் பாவத்திற்கு விடாமல் உம்முடைய இருதயத்தின் வழியில் நடக்கும்படி உமது சத்தியத்தினாலே என்னை தூய்மைப்படுத்தியதற்காக நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
2. இரட்சிப்பு: ஆண்டவரே உமது மகிமையின் ஞானத்திற்காக நான் உம்மை துதிப்பேன். ஏனென்றால் நீர் உமது அற்புதமான இரகசியங்களை காண்பித்தீர். உமது சத்தியத்தை எங்களுக்கு தெரியப்படுத்தினீர்.
3. உயர்வு: இஸ்ரவேலின் தேவனே நீர் பாக்கியவான். உமது அடியேனின் கொம்பை உயர்த்தி உமது உடன்படிக்கையை நிலைநிறுத்துவீர்.
4. நம்பிக்கை: நான் பாவத்தினாலே தடுமாறாதபடிக்கு நீதியின் பாதைகளில் என்கால்களை நிலைநாட்டும்.
5. சித்தம்: ஒளியின் ஆவியையும் இருளின் ஆவியையும் நீர் படைத்தீர் அவற்றின் அனைத்து செயல்களையும் நீர் தீர்மானித்திருக்கிறீர்.
இந்த 5 குறிப்புகளுக்குள்ளாகத்தான் மற்றும் பழைய ஏற்பாட்டு முறையில் யோவான் சீஷர்களுக்கு ஜெபிக்க கற்றுக்கொடுத்திருக்க வேண்டும். ஆனால் இயேசுவின் ஜெபம் வித்தியாசமாய் இருந்தது.
லூக்கா9:29, இயேசு ஜெபிக்கும் போது அவரது முகரூபம் மாறிற்று. அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது.
இயேசு முழங்கால் படியிட்டு அமைதியாய் ஜெபம் பண்ணுகிறார். அவர் ஜெபம் செய்து முடித்ததும் தேவதூதர்கள் இறங்கி அவரை பலப்படுத்தினார்கள். அவர் ஜெபம் முடித்த பின் சமாதானமாக உணர்ந்தார். அதற்காக தான் இயேசுவிடம் ஜெபிக்க கற்றுத்தாரும் என்று கேட்டார்கள்.
ஜெபம் என்பது ஒரு உறவு. தேவனோடு பேசுதல் என்பது அவரோடுள்ள உறவை வளர்க்கும். அவரை நிதானமாய் உணர்ந்து அவரோடு பேச வேண்டும்.
பழைய ஏற்பாட்டு காலத்தில் தேசத்திற்காகவும், எதிரியை அழிப்பதற்காகவும் ஜெபித்தார்கள்.
புதிய ஏற்பாட்டு ஜெபம், ஜனங்களின் மனந்திரும்புதலுக்காகவே ஜெபம் பண்ணினார்கள். தனக்குள் மாற்றம் வர வேண்டும் என்று ஜெபித்தார்கள்.
ஜெபிப்பவர்கள் -மன்னிப்பார்கள், கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவார்கள்.
யாத் 20:24, 2நாளா 3:1, தேவன் குறிப்பிட்ட இடத்தில் தொழுதார்கள்.
மத் 18:20, புதிய ஏற்பாட்டில் எங்கு நாம் கூடி அவருடைய நாமத்தை மகிமைப்படுத்தினாலும் நம் நடுவில் இருப்பார். நாம் இருக்கிற இடத்தில் இருந்தே தேவபிரசன்னத்தை அனுபவிக்க வேண்டும். அவரோடு இருக்கும் உறவு நமக்கு மிக முக்கியம்.
மத்தேயு 20:33, மாற்கு 10:51, லூக்கா 4:18, 7:21, குருடர்கள் கண்களை திறக்கும்படி இயேசுவிடம் கேட்டனர். உடனே அவர்களுக்கு பார்வையளித்தார். எபேசியர் 1:17,18,19. நம்முடைய கண்களையும் தேவன் திறந்தருள வேண்டும். ஜெபத்தைப் பற்றிய சரியான புரிதல் நமக்கு வேண்டும்.
1. ஆண்டவரே ஜெபிக்க எனக்குக் கற்றுத்தாரும்.
2. ஆண்டவரே நான் பார்வையடைய வேண்டும்.
(ஜெபத்தை பற்றிய புரிதல் நமக்கு உண்டாக அவர் நம் கண்களை திறந்தருள வேண்டும். இந்த 2 காரியங்களையும் தேவனிடத்தில் கேட்க வேண்டும். ஆமென்.