Youtube Link
https://www.youtube.com/watch?v=4IoyK_EwIXU
வேதபகுதி: 1பேதுரு5:8,9,10,11
எப்பொழுதும் ஒரு கடிதம் எழுதும் போது, அந்த கடிதத்தில் முதலாவது வாக்கியங்கள் மற்றும் இறுதி வாக்கியங்கள் முக்கியமானவைகள். இந்த 1பேதுரு நிருபம் ஒரு கடிதமாகும். 1பேதுரு 1:2ல் யாருக்கு எழுதுகிறார் என்று கூறியிருக்கிறார். 2-ம் அதிகாரத்தில் ஜனங்கள் யார் என்பதை அடையாளம் காட்டி எழுதுகிறார். 3-ம் அதிகாரத்தில் ஆசீர்வதித்து எழுதுகிறார். 4 ம் அதிகாரத்தில் இயேசுவை பற்றியும் அவரை போல் வாழ்வதைப் பற்றியும் எழுதுகிறார். 5-ம் அதிகாரத்தில் மூப்பர்களுக்கு உரிய ஆலோசனைகளை எழுதுகிறார்.
1பேதுரு5:8, (தேவன் ஏற்படுத்திய ஒழுங்கை நாம் செயல்படுத்தாதபடிக்கு நம்மை பிசாசானவன் வழிவிலகிப் போகப்பண்ணுகிறான். எனவே தெளிந்த புத்தியுள்ளவர்களாய் இருக்க வேண்டும்).
1பேதுரு 5:10ல், கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை நித்திய மகிமைக்கு அழைத்திருக்கிறார். நித்திய மகிமை: (கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கான சிறந்த திட்டத்தை தேவன் வைத்திருக்கிறார். அது என்றென்றைக்கும் நிலைத்திருக்கிற திட்டம் மகிமையான திட்டம்) எனவே கொஞ்சகாலம் பாடநுபவிக்கிற நம்மை தேவன் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலபடுத்தி, நிலைநிறுத்துவார்(1பேதுரு5:10).
பாடுகள் என்றால் என்ன? பாடுகள் ஏன் வருகிறது?
பாடுகள் என்றால் வலி. (சரீர வலி,மனவலி, மனஅழுத்தம், பாரம் இவைகள் அனைத்தும் கலந்தது தான் பாடுகள்.)
நாம் செய்யும் தவறின் விளைவுகள் தான் பாடுகள். (ஆதி3:17, ஆதாமை நோக்கி, தேவன் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய் என்கிறார்.) நாம் செய்த தவறு என்ன, அதை சுட்டிக்காட்டுங்க என்று தேவ சமூகத்தில் ஜெபித்து சீர்படுத்திக்கொள்ள வேண்டும்.
நம்முடைய தவறுகள் வருத்தத்தை ஏற்படுத்துகிறது எனவே நாம் பாடுகளை அனுபவிக்கிறோம். ஆனால் தேவன் நம் மீது அன்பு உள்ளவராய் இருக்கிறபடியால் அந்த பாடுகளையும் நமக்கு பிரயோஜனமாய் மாற்றுகிறார். பாடு என்பது நமக்கு கொடுக்கப்பட்ட சிறையல்ல அது ஒரு வகுப்பறை.
உதா: யோசேப்பு சகோதரர்களை கேலி செய்ததினால் பாடுகளை அனுபவித்தான். ஆனால், தேவன் அவன் பாடுகளையும் பிரயோஜனமாய் மாற்றினார். யோசுவா7:1ல், ஆகான் ஒருவன் செய்த தவறு அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. எப்போது கிறிஸ்துவின் முகம் நம்மேல் பிரகாசிக்கிறதோ அப்பொழுது பாடுகளிலிருந்து தேவன் நம்மை விடுவிப்பார். எனவே கொஞ்சகாலம் பாடுநுபவிக்கிற நம்மை தேவன் சீர்ப்படுத்துவார். (சீர்ப்படுத்துவார்-நம்மை முழுமைப் படுத்துவார், நமக்குள் இருக்கும் கசப்புகளை நீக்குவார்).
செயல்முறை முயற்சி: இந்த வாரத்தில் யாரைக்குறித்தும், எதைக் குறித்தும் குறை சொல்ல மாட்டேன் என்று தீர்மானம் எடுத்து நம்மை சீர்படுத்த வேண்டும்.
சவுலால் துரத்தப்பட்ட தாவீதிற்குள் எப்பொழுது கர்த்தருடைய முகப்பிரகாசம் வந்ததோ அப்பொழுது தேவன் தாவீதை ராஜாவாக அரியணை ஏற செய்தார். எனவே நாம் எப்பொழுதும் கிறிஸ்துவின் சுபாவத்தை வெளிப்படுத்துகிறவர்களாய் இருக்க வேண்டும். கிறிஸ்துவின் சுபாவத்தை வெளிப்படுத்தும் போது தேவன் பாடுகளிலிருந்து நம்மை விடுவிப்பார்.