Youtube Link
https://www.youtube.com/watch?v=aa1mkS8diPA
வேதபகுதி: 1பேதுரு2:4,9,21
தலைப்பு: ஆண்டவர் நம்மை தெரிந்துகொண்டதின் நோக்கம் என்ன?
இயேசு பேதுருவை பார்த்து நீ என் மேல் அன்பாய் இருக்கிறாயா? என்று கேட்டார். காரணம் -பேதுரு தம் அன்பை வெளிப்படுத்துவதைக் காண.
தேவன் ஏன் நம்மை அழைத்திருக்கிறார்? அதற்கான காரணங்கள்:
1பேதுரு2:4,5ல் விலையுயர்ந்த கல்லாக தேவன் நம்மை தெரிந்து கொண்டுள்ளார். தள்ளப்பட்ட நிலையிலிருந்த நம்மை அழைத்திருக்கிறார்.ரோமர்12:1 ன் படி விலையேறப்பெற்ற அவரோடு நாம் இணைக்கப்பட்டதால் நாமும் விலையேறப்பெற்றவர்களாய் இருக்கிறோம். எனவே நாம் நம்மை அவருக்கு பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க வேண்டும். ஜீவபலி என்பது சுயம் நம்மில் சாக வேண்டும்.
1.தேவனுக்கு பிரியமாய் வாழ நம்மை தெரிந்து கொண்டார்.
2.அந்தகாரத்திலிருந்து தேவன் நம்மை அழைத்திருக்கிறார், ஏனென்றால் அவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு தெரிந்து கொண்டார். (1பேதுரு2:9)
சங்கீதம்19:1ல், வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. உயிரற்ற இவைகள் தேவனுடைய மகிமையை அறிவிக்கும் போது, நாமும் தேவனுடைய மகிமையை அறிவிக்க வேண்டும்.
3.எந்த சூழ்நிலையிலும் அவருடைய சுபாவத்தை வெளிப்படுத்தும்படி நம்மை அழைத்திருக்கிறார். (1பேதுரு2:21)
இயேசுவை ஆராதிக்கும் நாம் அவருடைய குணநலன்களை வெளிப்படுத்துகிறோமா?
• தள்ளப்பட்ட நம்மை அழைத்ததன் நோக்கம் - அவருக்கு பிரியமாய் வாழ்வதற்கு.
• அந்தகாரத்திலிருந்து நம்மை அழைத்ததன் நோக்கம் - அவருடைய புண்ணியங்களை அறிவிக்க.
• கடினமான சூழ்நிலையிலிருந்த நம்மை அழைத்ததற்கான நோக்கம் - அவருடைய சுபாவத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக.
இந்த மூன்று காரியங்களும் நம் வாழ்வில் காணப்பட வேண்டும். இதற்காகவே தேவன் நம்மை தெரிந்து கொண்டார். ஆமென்.