Youtube Link
https://www.youtube.com/watch?v=xRoDLpulRRE
வேதபகுதி: 1பேதுரு2:9, நீங்களோ, உங்களை அந்தக்காரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.
தோல்வியின் சூழ்நிலையில் இருந்த பேதுருவை சந்தித்து இயேசு அவருடைய வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார்.
மூன்றரை ஆண்டுகள் இயேசுவோடு இருந்த அனுபவம் அவனுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
இயேசு பரமேறி சென்றபின் ஏறக்குறைய 33 ஆண்டுகள் கழித்துதான் இந்த நிருபம் எழுதப்பட்டது.
இந்த நிருபம் எழுதப்பட்ட காலத்தில் இருந்த ரோம அரசரான நீரோ மிகவும் மோசமானவனாய் கிறிஸ்தவர்களை கொலைசெய்கிறவனாய் இருந்தான். கிறிஸ்தவர்கள் கலக்கமான சூழ்நிலையில் வாழ்ந்து இருந்தார்கள். அவர்கள் இருதயத்தில் பயம் இருந்தது. அந்த பயம் நீங்குவதற்காக எழுதப்பட்ட நிருபங்கள்தான் இந்த 1 பேதுரு மற்றும் 2பேதுரு அதிகாரங்கள். இப்படிப்பட்;ட காலத்தில் உள்ள ஜனங்களைப் பார்த்து தான் பேதுரு
1. தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததி
2. ராஜரீகமான ஆசாரிய கூட்டம்
3. பரிசுத்த ஜாதி
4. அவருக்கு சொந்தமான ஜனங்கள் எனக் கூறுகிறார்.
கோடிக்கணக்கான ஜனங்கள் மத்தியில் தேவன் ஏன் நம்மை தெரிந்து கொண்டார்?
1. அவர் அன்பை வெளிப்படுத்தவே, அவர் நம்மை தெரிந்து கொண்டார். உபாகமம்7:6,7,8. எசேக்கியேல் 16:4,5,6.
தேவன் நம்மைப் பார்த்து பிழைத்திரு என்று சொல்லி நம்மை தேடி வந்தார்.
2. தேவனுடைய அன்பை அறிய வேண்டும் அதோடுமட்டுமல்லாமல் அவர் அன்பை நாம் அனுபவிக்க வேண்டும்.
நாம் இயேசுவின் அன்பை புரிந்து கொள்கிறோமா?
நாம் வாழ்நாள் முழுவதும் ஏறெடுக்க வேண்டிய ஒரு முக்கியமான ஜெபம்.
“இன்றைக்கு நான் உம்முடைய அன்பைப் புரிந்து கொள்வதற்கான இருதயத்தை
தாரும்.”
அவர் அன்பு கூறுவதினால் நம்மை தெரிந்துகொண்டார். அவர் நம்மோடு உறவாடுவதற்காக நம்மை தெரிந்து கொண்டார்.
தேவனுடைய அன்பு மிக ஆச்சரியமானது.
உதா: சகேயு: சமுதாயம் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் இயேசுவின் அன்பை புரிந்து கொண்டபின் அதை விட்டுவிட கூடாது என மனம் மாறினான்.
உலகம் நம்மிடத்தில் தவறு (அல்லது) குறை இருந்தால் நம்மை விட்டு விலகிவிடுவார்கள். இயேசு நம்மிடத்தில் குறை இருந்தாலும் நாம் எந்த நிலையில் இருந்தாலும் இயேசு நம் மீது அன்பாய் இருக்கிறார்.
3. அவருடைய குணாதிசயத்தை பிரதிபலிக்க அவர் நம்மை தெரிந்து கொண்டார். எனவே அவருடைய அன்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆமென்.