×
பயமும் பதற்றமும் நிறைந்த வாழ்க்கையில் சமாதானத்தை கண்டுபிடிப்பது எப்படி?| Bayamum Padhatramum nirantha valkaiyil samathanathai kandupidipathu eppadi? | 09 Feb 2025 | Rev. B. Samuel | Praise AG Church | Kolathur

Youtube Link

https://www.youtube.com/watch?v=nBgGtWs_0Tc


வேதபகுதி: லூக்கா8:22-25

ஆரோக்கியமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வது எப்படி? தொடர்ச்சி……

தலைப்பு: பயமும் பதற்றமும் நிறைந்த வாழ்க்கையில் சமாதானத்தை கண்டுபிடிப்பது எப்படி?

பயம் பதற்றம் இருப்பதற்கான அறிகுறிகள்:

      அமைதியில்லாமல் இருத்தல்.

      கவனம் செலுத்துவதில் குறைவு.

      தசை பதற்றம்.

      தூக்கமின்மை.

இவைகளை மேற்கொள்வது எப்படி?

1.            பயம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்க வேண்டும்.

  2தீமோத்தேயு1:7ல் தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.

•             ஒருநாளும் தேவன் பயத்தையும் பதற்றத்தையும் தருவதில்லை.

•             பயத்தை கொடுப்பது பிசாசு.

•             தேவனுடைய வார்த்தையை நம்புவதிலிருந்து திசைதிருப்புவதற்காக பிசாசு கொடுக்கிற நூதனமான திட்டம்.

•             ஆண்டவரை எல்லா சூழ்நிலைகளிலும் நம்புவதற்கு பழக வேண்டும்.

•             நாம் தேவனுடைய வார்த்தையை சரியாகக் கவனித்தால் பயம் நமக்குள் வராது.

2.            தேவனுடைய வார்த்தை, மாத்திரமே நிரந்தரம்.

   ஏசாயா41:10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்.

   “பிரச்சனையின் மீது நம்முடைய கவனத்தைக் குவித்தால் பயம் அதிகமாகும்.

   தேவன் மீது நம்முடைய கவனத்தைக் குவித்தால் நம்பிக்கை (விசுவாசம்) அதிகமாகும்.”

   சங்கீதம்121:4,5ல், இதோ இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. கர்த்தர் உன்னைக் காக்கிறவர்.

ஆண்டவர் எல்லா சூழ்நிலைகளின்மீதும் அதிகாரம் கொண்டவர். தம்முடைய பார்வைக்கு நலமான காரியத்தை செய்து முடிப்பார்.

3.            உங்களுடைய பயத்தையெல்லாம் ஜெபமாக மாற்றி விடுங்கள்.

   1பேதுரு5:7ல், அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள்.

4.            தேவனுடைய வார்த்தையினால் இருதயத்தை நிரப்பி விடுங்கள்.

  2தீமோத்தேயு1:7

  ஏசாயா41:10,13,14

  யோவேல்2:21

  ஏசாயா43:1

  மாற்கு5:36

  சங்கீதம்56:3

  சங்கீதம்27:1

  லூக்கா1:13   

       இந்த வசனங்களை தினமும் ஒரு நாளுக்கு 10 முறை வாசியுங்கள். இந்த வசனங்களை தியானித்து பாடல்களாக பாடுங்கள். இப்படி செய்யும் போது பயமும் பதற்றமும் நம்மைவிட்டு நீங்கும். ஆமென்.






Blog Categories

Related Posts

×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God