×

Youtube Link

https://www.youtube.com/watch?v=DdPBhm_ridc


தேவனுக்குப் பிரியமாய், பிரயோஜனமாய்

வேதபகுதி: உபாகமம் 33:1-5 (தேவனுடைய மனுஷனாகிய மோசே)

1.            தெய்வீக சந்திப்பு

2.            தெய்வீக வார்த்தை

3.            தெய்வீக அன்பு

4.            தெய்வீக ஐக்கியம்

உபாகமம் 33:1-2 சீனாய் மலையில் மோசேயை 80 வது வயதில் தேவன் சந்தித்தார். மோசேக்கு கிடைத்த இந்த சந்திப்பு நம் வாழ்வில் நடந்திருக்கிறதா?

 யாக்கோபை தேவன் லூஸ் என்ற இடத்தில் சந்தித்தார் அதன் பின்பு அந்த இடம் பெத்தேலாக மாறியது. யாக்கோபுக்கு எல்லாம் இருந்துத ஆனாலும் ஜெபத்தில் தேவனோடு போராடுகிறார். நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மை போகவிடமாட்டேன். இந்த போராட்டம் எத்தன் (இஸ்ரவேலாக) மாறியது. ;

   சாமுவேல் சிறுகுழந்தை அவன் நிலைக்கு தேவன் இறங்கி சந்தித்தார். கடைசி நியாயாதிபதி முதல் தீர்க்கதரிசி சாமுவேல் மட்டும் தான்.

 சவுலை தேவன் சந்தித்தார் அப்போஸ்தலர் 9-ம் அதிகாரத்தில் அவனுக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டு பின் நாட்களில் சீஷனாக மாறினான்.

தெய்வீக வார்த்தை: உபா 33:4 மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தார் அது யாக்கோபின் சபைக்கு சுதந்தரமாயிற்று (யாத் 20:1-17 - 10 கட்டளைகள்)

தெய்வீக அன்பு: உபா 33-3. மெய்யாகவே அவர் ஜனங்களை சந்தித்தார்.

 இளைய குமாரன் தகப்பனை தேடி வந்தார். தகப்பனும் அவனை மன்னித்து ஏற்றுக் கொண்டார்.

தெய்வீக ஐக்கியம்;;: தேவன் நம்மை எங்கெல்லாம் வைத்திருக்கிறாரோ

அங்கெல்லாம் உண்மையாக இருக்க வேண்டும். ஆண்டவர் நம்மை தெய்வீக ஐக்கியத்தில் இணைந்திருக்க விரும்புகிறார். ஆமென்

Blog Categories

Related Posts

×

Notice!!

Praise A.G. Church Welcomes you. Explore our Ministry and lets build the kingdom of God